செங்கடலில் அமெரிக்க ஹெலிகாப்டர்கள் அதிரடி தாக்குதல் – ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 10 பேர் பலி

சனா, காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் காசாவில் இதுவரை 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் – ஹமாஸ் போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் … Read more

புத்தாண்டின் முதல் நிலநடுக்கம் ஜப்பானைத் தாக்கியது! சுனாமி வரும் என எச்சரிக்கை!

2024 Tsunami Alert: ஜப்பானில் இன்று அதிகாலை 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து முதல் சுனாமி அலைகள் ஜப்பானைத் தாக்கியது.

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு – மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

டோக்கியா: ஜப்பான் நாட்டின் ஹொன்ஷு தீவுகள் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் எற்பட்டுள்ளது. அடுத்தடுத்து 7.2 ரிக்டர் முதல் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாலும் அவை கடலுக்கு அடியில் மையம் கொண்டிருந்ததாலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி காலை 12.40 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக ஐரோப்பிய நில அதிர்வு ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், “ஜப்பானின் ஹொன்ஷுவின் மேற்குக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 5.5, 7.5, 6.2 ரிக்டர் … Read more

Japan Earthquake: Terrible earthquake in Japan: 7.6 on the Richter scale; Tsunami warning | ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி தாக்கியது !

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டோக்கியோ: ஜப்பானின் மேற்கு பகுதியில் இன்று(ஜன.,01) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவானது. மேலும் சுனாமி அலை ஒரு சில பகுதிகளை தாக்கியது. மேலும் பல்வேறு இடங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொருட்சேதம், உயிர்ச்சேதம் அதிகம் இருக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும் பசிபிக்பெருங்கடல் பகுதி, ரஷ்யா, வட கொரியாவுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஜப்பானின் மேற்கு பகுதியில் உள்ள ஹோன்சு, டோயாமா, இஷிகவா, நிகாடா, … Read more

1.89 lakh policemen are mobilized for Bangladesh election duty | வங்கதேச தேர்தல் பணியில் 1.89 லட்சம் போலீசார் குவிப்பு

டாக்கா : வங்கதேசத்தில், ஜன., 7ம் தேதி நடக்கவுள்ள பொதுத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக, பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி அறிவித்துள்ளதை தொடர்ந்து, நாடு முழுதும், 1.89 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அசம்பாவிதம் நம் அண்டை நாடான வங்கதேசத்தில், பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆவாமி லீக் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு ஜன., 7ம் தேதி பொதுத் தேர்தல் நடக்கஉள்ளது. ‘ஷேக் ஹசீனா ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் தேர்தல் நியாயமாக நடக்காது. … Read more

நியூசிலாந்தில் தொடங்கியது புத்தாண்டு – ஆக்லேண்ட் நகரத்தில் உற்சாகக் கொண்டாட்டம்

ஆக் லேண்ட் (நியூசிலாந்து): நியூசிலாந்தின் ஆக்லேண்ட் நகரம் 2024 புத்தாண்டு வரவேற்கும் உலகின் முதல் நகரமாக மாறியுள்ளது. உயரமான கட்டிடமான ஸ்கை டவர், டவுன்டவுணில் இருந்து வெளிப்படும் வண்ண வான வேடிக்கைகளும் மக்களின் ஆராவாரங்களும் இதற்கு கட்டியம் கூறுகின்றன. உக்ரைன் மற்றும் காசா போர்ச்சூழல் பல்வேறு நகரங்களில் கொண்டாட்ட மனநிலையை முடக்கி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பல நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சில இடங்களில புத்தாண்டுக்கு முந்தைய கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆக்லேண்ட் நகரில் 328 மீட்டர் … Read more

ரஷியா மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல் – 21 பேர் பலி

மாஸ்கோ, உக்ரைன் – ரஷியா இடையேயான போர் இன்று 676வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. அமைதி பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் உடன்படாத நிலையில் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனிடையே, உக்ரைனின் கீவ், டின்புரொ, கார்கிவ், லிவிவ் உள்ளிட்ட நகரங்கள் மீது கடந்த வெள்ளிக்கிழமை ரஷியா தாக்குதல் நடத்தியது. போர் விமானங்கள், ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் … Read more

இந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவு

ஜகார்த்தா, இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியான பப்புவாவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பப்புவா மாகாணத்தின் தலைநகரான ஜெயபுராவில் உள்ள துணை மாவட்டமான அபேபுராவிலிருந்து வடகிழக்கே 162 கிலோமீட்டர் (101 மைல்) தொலைவில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது 10 கிலோமீட்டர் (6 மைல்) ஆழத்தில் நடந்தது. இந்தோனேசியாவின் வானிலை, தட்பவெப்பவியல் மற்றும் புவி இயற்பியல் நிறுவனம், சுனாமி ஆபத்து எதுவும் இல்லை என்று கூறியது, … Read more

இஸ்ரேல்-ஹமாஸ் போர் "இன்னும் பல மாதங்களுக்கு" தொடரும் – நெதன்யாகு அதிர்ச்சி தகவல்

காசா, பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள காசா நகரம் மீது இஸ்ரேல் கடந்த அக்டோர் மாதம் 7-ந்தேதி முதல் போர் தொடுத்து வருகிறது. போர் தொடங்கிய சமயத்தில் வடக்கு காசாவை குறிவைத்து சரமாரியாக தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் பின்னர் தெற்கு காசாவை நோக்கி தாக்குதல்களை விரிவுப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாக மத்திய காசாவில் இஸ்ரேல் ராணுவம் தரைவழியாகவும், வான்வழியாகவும் தீவிரமாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. இஸ்ரேலின் இந்த ஆக்ரோஷமான தாக்குதல்களால் காசாவில் … Read more

Born in New Zealand 2024 New Year: Peoples Celebration. | நியூசிலாந்தில் பிறந்தது ஆங்கிலப் புத்தாண்டு: கேக் வெட்டி மக்கள் கொண்டாட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஆக்லாந்து: உலகில் பசுபிக் தீவில் உள்ள கிரிபாட்டியில் ஆங்கிலப் புத்தாண்டு(2024) பிறந்தது. தொடர்ந்து நியூசிலாந்திலும் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது. மக்கள் உற்சாகத்துடன் பட்டாசு வெடித்துயும், கேக் வெட்டியும் புத்தாண்டை வரவேற்றனர். 2024 ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்க உலக முழுவதும் மக்கள் தயாராகி உள்ளனர்.பசிபிக் தீவான கிரிபாட்டியில் ஆங்கிலப் புத்தாண்டு முதலில் பிறந்தது. அதைத் தொடர்ந்து, டோங்கா, சமோவா, நியூசிலாந்திலும் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது. உடனடியாக மக்கள் பட்டாசுகளை வெடித்தும், … Read more