'நிறுத்துங்கள் புதின்; வாரம் 5 ஆயிரம் வீரர்கள் பலியாகின்றனர்' – கண்டனம் தெரிவித்த டிரம்ப்

வாஷிங்டன், உக்ரைன்-ரஷியா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரால் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்த நிலையில், தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுவதாக ரஷிய அதிபர் புதின் அறிவித்தார். ஆனால் அன்றைய தினத்திலும் ரஷியா தாக்குதல் … Read more

பாகிஸ்தான் ராணுவம் தயார் நிலையில் இருக்க அந்நாட்டு அரசு உத்தரவு

கராச்சி, காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் நேற்று முன்தினம், பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது வெறித்தனமாக துப்பாக்கிசூடு நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த சம்பவத்துக்கு காரணமான பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் முப்படைகளும் தயார் நிலையில் இருக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தானின் ராணுவம் தயார் நிலையில் இருக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியா பதிலடி … Read more

சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது பாகிஸ்தான்… எல்லையில் ராணுவம் குவிப்பு

இஸ்லாமாபாத், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம்மில் நேற்று முன்தினம் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பு இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளதால், பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்துவருகிறது. அதன் ஒருபகுதியாக, பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதிநீரை இந்தியா நிறுத்தியுள்ளது. இதனால் 65 ஆண்டு கால சிந்து நதிநீர் ஒப்பந்தம் இப்போது கைவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு இது பெரிய அளவில் … Read more

பஹல்காம் தாக்குதல்: நீங்கள் ஏன் அதை கண்டிக்கவில்லை..? பாக்.பிரதமருக்கு கனேரியா கேள்வி

கராச்சி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு விளையாட்டு பிரபலங்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றால் பிரதமர் ஏன் இன்னும் அதைக் கண்டிக்கவில்லை? என்று அந்தாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து டேனிஷ் கனேரியா தனது … Read more

சிந்து நதிநீர் பங்கீட்டை இந்தியா நிறுத்துவது ‘போர் நடவடிக்கை’யே: பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க இந்தியா எடுத்துள்ள முடிவு, ‘போர் நடவடிக்கை’ ஆக கருதப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைசரன் பள்ளத்தாக்கில், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) கடந்த 22-ம் தேதி சுற்றுலா பயணிகளைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி ஈடுபட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு … Read more

போப் பிரான்சிஸ் உடலுக்கு விடிய விடிய மக்கள் அஞ்சலி

ரோம், உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர், போப் ஆண்டவர்(வயது 88), உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 21-ந்தேதி உயிரிழந்தார். போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலகத்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரின் இறுதிச்சடங்கு 26-ந்தேதி(சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இறுதிச்சடங்கிற்கு முன் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக போப் பிரான்சிஸ் உடல் ரோம் நகரில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேற்றைய தினம் சுமார் 8 மணி நேரத்தில் 20 … Read more

பஹல்காம் தாக்கம்: இந்தியாவின் 5 அதிரடி அறிவிப்புகளுக்கு பாகிஸ்தான் ரியாக்‌ஷன் என்ன?

புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், பயங்கரவாதத்துக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானை வழிக்கு கொண்டுவர, சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்துவது உள்ளிட்ட 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில், இந்த நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் எவ்வாறு எதிர்வினையாற்றியுள்ளது என்று பார்ப்போம். இந்தியாவின் ஐந்து நடவடிக்கைகளில் சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்தும் உத்தரவு, பாகிஸ்தானுக்கு பேரிடியாக இறங்கியுள்ளது எனலாம். இந்தியா, … Read more

‘யாரும் ஜம்மு-காஷ்மீருக்கு செல்ல வேண்டாம்’ – குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்

வாஷிங்டன்: அமெரிக்கர்கள் யாரும் ஜம்மு-காஷ்மீருக்கு செல்ல வேண்டாம் என்றும், இந்தியா-பாகிஸ்தான் எல்லையிலிருந்து 10 கிலோமீட்டருக்குள் செல்வதைத் தவிர்க்குமாறும் அமெரிக்கா பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைசரன் பள்ளத்தாக்கில், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) கடந்த 22-ம் தேதி நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலை அடுத்து ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த … Read more

அமெரிக்க தலைவர் பயணத்தில் மீண்டும் தாக்குதல்

கடந்த 2000-ம் ஆண்டு மார்ச்சில் அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் அரசுமுறைப் பயணமாக இந்தியா வருவதற்கு சில மணி நேரத்துக்கு முன் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். மார்ச் 20-ம் தேதி மாலை, அனந்த்நாக் மாவட்டத்தில் சீக்கியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சிட்டிசிங்போரா என்ற தொலைதூர கிராமத்துக்குள் இந்திய ராணுவ சீருடையில் தீவிரவாதிகள் நுழைந்தனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில், கிராமவாசிகள் மெழுகுவர்த்திகள் மற்றும் விளக்குகளை ஏற்றி வைத்திருந்தனர். பலர் டிரான்சிஸ்டர் ரேடியோக்களில் அமெரிக்க அதிபரின் … Read more

துருக்கியில் பயங்கர நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு

அங்காரா, துருக்கியில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 3.19 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 40.99 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 28.10 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கம் இஸ்தான்புல்லுக்கு அருகிலுள்ள மர்மாரா கடலில் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் … Read more