மொரோக்கா நிலநடுக்கம்: இப்படியா விடியணும்..! சுமார் 300 பேர் பலி.. பெரும் சோகம்!

ரிக்டர் அளவுகோலில் 6.8ஆகப் பதிவாகி உள்ளது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருப்பதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “மொராக்கோ மக்களின் இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவர்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். இந்த கடினமான நேரத்தில் மொராக்கோ நாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக … Read more

மொராக்கோவில் 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்! 296 பேர் பலி

Morocco Earthquake Killed 296: மொராக்காவில் 6.8 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் இதுவரை 296 பேர் நிலநடுக்கத்தில் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலி எண்ணிக்கை உயரக்கூடும்

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி மந்திரியை இடைநீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

சிங்கப்பூர், சிங்கப்பூரில் போக்குவரத்து துறை மந்திரியாக பதவி வகிப்பவர் ஈஸ்வரன் (வயது 61). அந்த நாட்டின் நாடாளுமன்ற துணை சபாநாயகராகவும் இவர் பணியாற்றி உள்ளார். இந்திய வம்சாவளியான இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. இது தொடர்பாக கடந்த ஜூலை மாதம் ஊழல் தடுப்பு புலனாய்வு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட இவர் பிறகு ஜாமீனில் வெளிவந்தார். இந்தநிலையில் வருகிற 18-ந் தேதி சிங்கப்பூர் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. அதற்கு முன்பு அவரை … Read more

உக்ரைனுக்கு மேலும் 600 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ உதவி – அமெரிக்க அரசு அறிவிப்பு

வாஷிங்டன், உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது படைகளை அனுப்பி தாக்குதல் நடத்த தொடங்கியது. இதற்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரில் இருதரப்பிலும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இதற்கிடையில், இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. மேலும் உக்ரைனுக்கு பொருளாதார உதவிகள் மற்றும் ஆயுத உதவிகளையும் வழங்கி வருகின்றன. … Read more

ஸ்பெயின் அதிபருக்கு கொரோனா; ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என அறிவிப்பு

மேட்ரிட், ஜி-20 அமைப்புக்கு இம்முறை இந்தியா தலைமை தாங்கி உள்ளது. இந்த நிலையில் நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் டெல்லியில் உள்ள பிரகதி மைதானம் பாரத் மண்டபத்தில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர். அந்த வகையில் ஸ்பெயின் நாட்டின் அதிபர் பெட்ரோ சான்செஸ், இந்தியாவிற்கு வருகை தர இருந்தார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் … Read more

அமெரிக்காவில் இந்திய நகைக்கடைகளை குறிவைத்து கொள்ளையடித்த கும்பல் கைது

வாஷிங்டன், அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை மாகாணங்களான நியூயார்க், நியூ ஜெர்சி, வெர்ஜீனியா, புளோரிடா மற்றும் பென்சில்வேனியா உள்ளிட்டவற்றில் இந்தியா மற்றும் தெற்காசிய நகைக்கடைகளை குறிவைத்து ஆயுதம் ஏந்திய கும்பல் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது. இதுகுறித்து நாட்டின் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. மர்மகும்பலுக்கு வலைவீசி தேடியது. இந்தநிலையில் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் பதுங்கி இருக்கும் இடம் குறித்து தகவல் தெரியவந்தது. அதன்பேரில் தனிப்படை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு சுற்றி வளைக்கப்பட்டனர். அவர்களை கைது செய்த அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து … Read more

இந்தியாவின் பெயரை மாற்ற கோரிக்கை வந்தால் பரிசீலிப்போம் – ஐ.நா. தகவல்

நியூயார்க், டெல்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ளும் உலக தலைவர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் இரவு விருந்து அளிக்கப்படவுள்ளது. இதற்காக ஜனாதிபதி மாளிகையின் சார்பில் விருந்தினர்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழில் இந்திய ஜனாதிபதி என்பதற்கு பதிலாக பாரத ஜனாதிபதி என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றுவதற்கு முயற்சிகள் நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ … Read more

பயங்கரவாதிகள் வெறிச்செயல்: 64 பேர் பலி | Terrorist rampage: 64 killed

பமாகோ,- மாலியில் பயங்கரவாதிகள் நடத்திய இருவேறு தாக்குதல்களில், பாதுகாப்பு படை வீரர்கள், 15 பேர் உட்பட, 64 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியின் திம்புக்டு நகரில் உள்ள நதியில் சென்ற பயணியர் படகை குறிவைத்து, நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்; இதேபோல், காவ் பகுதியில் உள்ள ராணுவ முகாமிலும் அதிரடி தாக்குதல் நடத்தினர். இந்த இரு தாக்குதல் சம்பவங்களிலும், 49 பொதுமக்கள், 15 பாதுகாப்பு படை வீரர்கள் என மொத்தம், … Read more

ரஷ்யா-உக்ரைன் போரின் மிகப்பெரிய தாக்குதலை தடுத்து நிறுத்தியது நான்தான்: எலான் மஸ்க்

ரஷ்ய கடற்படை தளத்தை உக்ரைன் தாக்காமல் இருக்க நான் தான் காரணம் என்று தெரிவித்து இருக்கிறார் உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க். ஒரு வருடத்துக்கும் மேலாக ரஷ்யா -உக்ரைன் போர் நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஆண்டு மாஸ்கோ அருகில் உள்ள கருங்கடல் பகுதியில் இணைய வசதியை செயல்படுத்த உக்ரைன் சார்பில் தனக்கு அவசர கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதன் விளைவை கருத்தில் கொண்டு இணைய வசதியை நான் செயல்படுத்தவில்லை. அப்போது, ஸ்டார்லிங்க் சேவையை செயல்படுத்த … Read more

டொனால்டு ட்ரம்ப்பை அதிரடியாக சந்தித்த தோனி.. தலயிடம் பல டிப்ஸ்களை கற்றுக்கொண்ட ட்ரம்ப்

நியூயார்க்: முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சந்தித்து பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற தோனி, தற்போது உலக நாடுகளை சுற்றிப்பார்த்து வருகிறார். கிரிக்கெட் மட்டுமல்லாமல் கால்பந்து, பாட்மிண்டன், ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுகளிலும் கைத்தேர்ந்தவர் ஆவார். அந்த வகையில், தற்போது உலக அளவில் நடக்கும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை தோனி நேரில் சென்று கண்டு ரசித்து வருகிறார். சமீபத்தில் … Read more