'இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை' சிங்கப்பூர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட தர்மன் சண்முகரத்னம் பேட்டி
சிங்கப்பூர் நகர நாடான சிங்கப்பூரின் அதிபர் ஹலிமா யாகோப்பின் பதவிக்காலம் வருகிற 13-ந் தேதி முடிவடைகிறது.இந்த நிலையில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்காக நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், தமிழருமான தர்மன் சண்முகரத்னம் (வயது 66) வெற்றி பெற்றார். அவருக்கு 70.4 சதவீத வாக்குகள் கிடைத்தன. வெற்றிக்கு பிறகு நிருபர்களிடம் மகிழ்ச்சியுடன் பேசிய தர்மன் சண்முகரத்னம், ‘நான் இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை. பொதுவாக ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்காதவர்களும், இது அரசியல் தேர்தல் … Read more