நியூயார்க்கில் 'டிக்டாக்' செயலியை அரசுடைமை சாதனங்களில் உபயோகிக்க தடை…!!!

நியூயார்க், சில வருடங்களுக்கு முன், இந்தியாவில் அதிகமானோர் உபயோகிக்கும் செயலியாக இருந்தது ‘டிக்டாக்’ ஆகும். இந்த செயலி, கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய அரசால் தடை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் சீனாவிற்கு சொந்தமான இந்த செயலியை தடை செய்தன. இந்நிலையில் நியூயார்க் நகர அரசு, ‘டிக்டாக்’ செயலியை அரசுடைமை சாதனங்களில் உபயோகிக்க தடை செய்துள்ளது. ஏற்கனவே சாதனங்களில் பதிவிறக்கம் செய்து வைத்திருந்தால் 30 நாள்களுக்குள் அதனை நீக்கிவிட வேண்டும் எனவும் ஆணை … Read more

விமான பாத்ரூமில் மயங்கி விழுந்து உயிரிழந்த பைலட்… அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

சான்டியாகோ, மியாமியில் இருந்து சிலி நோக்கி 271 பயணிகளுடன் லாதம் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றுகொண்டிருந்தது. அப்போது பைலட் இவான் ஆண்ட்ரூவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. பாத்ரூமுக்கு சென்ற அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து விமானம் உடனடியாக பனாமா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும் விமான நிலைய மருத்துவக் குழுவினர் வந்து பைலட்டை பரிசோதனை செய்தனர். அவருக்கு உயிர்காக்கும் … Read more

பாகிஸ்தானில் தேவாலயங்கள், வீடுகள் தாக்கப்பட்ட விவகாரம்: 129 பேர் கைது

ஜரன்வாலா(பாகிஸ்தான்): பாகிஸ்தானில் சிறுபான்மை கிறிஸ்தவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியதாக 129 முஸ்லிம்களை அந்நாட்டுப் போலீஸார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானின் ஃபைசலாபாத் மாவட்டத்தில் உள்ள ஜரன்வாலா நகரில் ராஜா அமிர் என்ற கிறிஸ்தவர், குரான் புத்தகத்தின் சில பக்கங்களை கிழித்தெறிந்ததாக பரவிய தகவலை அடுத்து, அந்த நகரில் கிறிஸ்தவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வீடுகள் மீது ஒரு கும்பல் நேற்று தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு தேவாலயம் தீ வைத்து கொளுத்தப்பட்டதாகவும், 4 … Read more

ஒரு லிட்டர் ரூ.290 – அதிரடியாக உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை… மழுப்பல் காரணம் சொன்ன பாகிஸ்தான் அரசு..

பாகிஸ்தானில் அப்துல் உல் ஹக் தலைமையிலான காபந்து அரசு பொறுப்பேற்ற 48 மணி நேரத்தில் பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.17.50 வரை உயர்ந்துள்ளது. பாகிஸ்தான் நிதிப் பிரிவு வெளியிட்ட தகவலின் அடிப்படையில், ஒரு லிட்டர் பெட்ரோல் 290.45 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல டீசல் விலையும் ஒரே நாளில் 20 ரூபாய் வரை உயர்ந்து லிட்டருக்கு 293.40 ரூபாய்க்கு விற்பனையாகிறது. காபந்து பிரதமர் அப்துல் உல் ஹக் ஒப்புதல் அளித்ததை … Read more

நடுவானில் நெஞ்சு வலியால் விமானி உயிரிழப்பு: 271 பயணிகளுடன் பனாமாவில் தரையிறக்கப்பட்ட விமானம்

பனாமா சிட்டி: மியாமியில் இருந்து சீலேவுக்கு 271 பயணிகளுடன் சென்ற விமானத்தின் விமானிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார். அவசரம் கருதி அந்த விமானம் பனாமாவில் தரையிறக்கப்பட்டது. ஞாயிறு அன்று நடுவானில் அந்த விமானம் சென்று கொண்டிருந்தபோது கழிவறையில் மயங்கிய நிலையில் 56 வயதான விமான கேப்டன் இவான் ஆண்டூர் கண்டெடுக்கப்பட்டுள்ளார். நல்வாய்ப்பாக அவர் அந்த நேரத்தில் விமானத்தை இயக்கவில்லை. அவருக்கு மருத்துவ உதவி வழங்கும் நோக்கில் பனாமாவில் அந்த விமானத்தை தரையிறக்கியுள்ளார் துணை விமானி. அவரை … Read more

கனடாவில் அவசரநிலை அறிவிப்பு… அச்சுறுத்தும் காட்டுத் தீயால் அரசு நடவடிக்கை!

அமெரிக்காவின் ஹவாய் தீவில் கடந்த வாரம் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டது. மவுய் பகுதியில் பரவிய இந்த காட்டுத் தீ மளமளவென லஹைனா, குலா உள்ளிட்ட நகரங்களிலும் பரவியது. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்களும் 100க்கும் மேற்பட்ட வீடுகளும் தீக்கு இரையாகியுள்ளன. இந்த கொடூர தீ விபத்தில் சிக்கி இதுவரை 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 1000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். மோப்ப நாய்களின் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை கைப்பற்றப்பட்டுள்ள 100க்கும் … Read more

பாத்ரூமில் விழுந்து விமானி உயிரிழப்பு… நடுவானில் 271 பயணிகள் – அடுத்து நடந்தது என்ன?

World News In Tamil: 271 பயணிகளுடன் வானில் பறந்துகொண்டிருந்த விமானத்தின் விமானி ஒருவர் திடீரென பாத்ரூமில் விழுந்து மரணம் அடைந்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. 

உக்ரைன் போருக்கிடையிலும் காரியத்தில் கண்ணாயிருக்கும் ரஷ்யா… நிலவின் சுற்றுப்பாதையில் லூனா 25!

ரஷ்யா – உக்ரைன் போர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இருநாடுகளும் போட்டி போட்டுக்கொண்டு நடத்தி வரும் தாக்குதல்களால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இருநாடுகளும் உயிர்ச்சேதத்தையும் பொருட் சேதத்தையும் சந்தித்து வருகின்றன. ஒரு பக்கம் போர், அணு ஆயுதங்களை வைத்துக்கொண்டு அச்சுறுத்துவது, எதிரி நாடுகளுடன் மல்லுக்கட்டுவது என்று இருந்தாலும் தனது காரியத்திலும் கண்ணாக உள்ளது ரஷ்யா. இந்தியா சந்திரயான் 3 விண்கலத்தை நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய அனுப்பியதுமே ரஷ்யா, தனது லூனா 25 விண்கலத்தை … Read more