சாலை பாதுகாப்பு விதிகளை மீறிய 297 ஓட்டுநர்கள்: போலீஸுக்கு உதவிய AI கேமரா!

லண்டன்: பிரிட்டனில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 3 நாட்களில் சாலை பாதுகாப்பு விதிகளை மீறிய 297 ஓட்டுநர்களை போலீஸுக்கு அடையாளம் காட்டியுள்ளது ஏஐ கேமரா. கடந்த ஆண்டு இதை பொருத்தி சோதனை ஓட்டம் பார்த்துள்ளனர் டெவன் மற்றும் கார்ன்வால் பகுதி போலீஸார். அதில் வாகனம் ஓட்டியபடி போனில் பேசியவர்கள் மற்றும் சீட் பெல்ட் அணியாதவர்களை ஏஐ கேமரா சுட்டிக்காட்டியுள்ளது. அந்த காட்சியை மனிதவளத்தை கொண்டு உறுதி செய்த பின்னர் அபராதம் விதிக்கலாம் என போலீஸார் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், … Read more

பாகிஸ்தானில் சூரையாடப்படும் தேவாலயங்கள்… பாதிரியார்கள் கடும் கண்டனம்!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மத நிந்தனை குற்றச்சாட்டின் பேரில் தேவாலயங்கள் சேதப்படுத்தப்பட்டன.

பாகிஸ்தானில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.290, டீசல் ரூ.293

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த 14-ம் தேதி அன்வர் உல் ஹக் ககர் இடைக்கால பிரதமராக, நியமிக்கப்பட்டார். இதையடுத்து அங்கு பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களில் மட்டும் எரிபொருள் விலை லிட்டருக்கு ரூ.40 உயர்த்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. எரிபொருள் மட்டுமல்லாது, தக்காளி, வெங்காயம், அரிசி, கேஸ் சிலிண்டர் என 54 அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. … Read more

பிரபாகரனின் மனைவி, மகள் உயிருடன் உள்ளார்களா…? இலங்கை அரசு மறுப்பு

கொழும்பு, இலங்கையில் முப்பது ஆண்டுக் காலமாக நடந்த உள்நாட்டுப் போர், 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. மேலும் இறுதிக்கட்ட போரின்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அவரது உறவினர்கள் உயிரிழந்ததாகவும் இலங்கை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவி மதிவதனியின் சகோதரி எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒரு பெண் சமூக … Read more

இம்ரான் கானின் 9 ஜாமீன் மனுக்கள் நிராகரிப்பு: இஸ்லாமாபாத் நீதிமன்றங்கள் அதிரடி

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான் மீது ஊழல், கொலை, பயங்கரவாதம், தேச துரோகம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. கடந்த மே மாதம் ஊழல் வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ராணுவ அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. வன்முறை தொடர்பாக இம்ரான் கான் ஆதரவாளர்கள் பலர் கைது … Read more

மியான்மரில் சுரங்கம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு

யாங்கூன், மியான்மர் நாட்டில் ஜேட் என்ற கனிமத்தை பிரித்தெடுப்பது பரவலாக மேற்கொள்ளப்படும் தொழில் ஆகும். அதன்படி கச்சின் மாகாணத்தில் உள்ள சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் இடிபாடுகளில் சிக்கி 2 பேர் பலியானார்கள். 8 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் … Read more

2030-க்குள் புகைப்பழக்கத்தை ஒழிக்க இங்கிலாந்து உறுதி

லண்டன், இங்கிலாந்து நாட்டில் புகைப்பிடித்தல் பழக்கத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் பேர் புற்றுநோய், மாரடைப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் தனிநபருக்கு மட்டுமின்றி அரசாங்கத்துக்கும் சுகாதார செலவுகள் அதிகரித்து வருகின்றன. எனவே இதனை குறைக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக சிகரெட் பாக்கெட்டுகளில் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும், புகைப்பழக்கத்தை கைவிடும்போது ஏற்படும் நன்மைகளையும் குறிப்பிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன் … Read more

தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு

துஷான்பே, மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான் நாட்டில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.2 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. அதிகாலை 2.56 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. தினத்தந்தி Related Tags : தஜிகிஸ்தான்  நிலநடுக்கம்  Tajikistan  earthquake 

இரவோடு இரவாக தீக்கிரையான நகரம்.. ஹவாய் தீவில் பரவும் காட்டுத் தீ.. 106 பேர் பலி.. 1000 பேர் மிஸ்ஸிங்!

அமெரிக்காவின் முக்கிய தீவுகளில் ஒன்று ஹவாய். முக்கிய சுற்றுலாத் தலமாகவும் திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் ஹவாய் தீவு கூட்டத்தின் 2வது மிகப்பெரிய தீவான மவுய் பகுதியில் சமீபத்தில் காட்டுத் தீ ஏற்பட்டது. ஆரம்பத்தில் சாதாரணமாக தொடங்கிய இந்த காட்டுத் தீ கடுமையான வெயிலின் தாக்கத்தால் தனது கோர முகத்தை காட்டியது. காட்டுத் தீயை கடுப்படுத்தும் பணியில் விமானப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. ஒவ்வொரு நொடியும் காட்டுத் தீ பரவலின் வேகம் … Read more