Pakistan, Inzamam appointed as Team Selection Committee Chairman | பாக்., அணி தேர்வு குழு தலைவராக இன்சமாம் நியமனம்

இஸ்லமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தேர்வு குழு தலைவராக முன்னாள் வீரர் இன்சமாம் உல்ஹாக் நியமிக்கப்பட்டார். 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தாண்டு அக்டோபரில் துவங்குகிறது.இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தேர்வுக்குழு தலைவர் நியமனம் தொடர்பாக பி.சி.பி., எனப்படும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்திய ஆலோசனைக்கு தேர்வுக்குழு தலைவராக முன்னாள் கேப்டன், இன்சமாம் உல்ஹாக் தேர்வு செய்யப்பட்டார். இஸ்லமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தேர்வு குழு தலைவராக முன்னாள் வீரர் இன்சமாம் உல்ஹாக் நியமிக்கப்பட்டார். … Read more

பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் 3 பேர் சுட்டுக்கொலை – இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் அதிரடி

ஜெருசலேம், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்கிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. ஹமாஸ் அமைப்பை போன்று மேலும் சில ஆயுதமேந்திய குழுக்கள் காசா முனை, மேற்குகரையில் செயல்பட்டு வருகின்றன. அதேவேளை பாலஸ்தீனத்திற்கு மேற்கு கரையில் முகமது அப்பாஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், … Read more

போப் அறிவிப்பு: LGBTQ+ சமூகம் உட்பட அனைவரையும் கத்தோலிக்க திருச்சபை வரவேற்கிறது

Catholic Church welcoming stance: LGBTQ+ சமூகம் உட்பட அனைத்து தரப்பு மக்களையும் கத்தோலிக்க திருச்சபை வரவேற்கிறது என்று போப் பிரான்சிஸ் அறிவித்தார்

மொராக்கோவில் மினி பஸ் கவிழ்ந்ததில் 24 பேர் உயிரிழப்பு

மொராக்கோ, வட ஆப்பிரிக்காவில் உள்ள மொராக்கோ நாட்டில் உள்ள மத்திய மாகாணமான அஜிலாலில் மிக மோசமான சாலை விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில், 24 பேர் உயிரிழந்துள்ளனர். அஜிலாலில் உள்ள டெம்னேட் நகரில் நடைபெற்ற வாராந்திர சந்தைக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற மினிபஸ் வளைவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை தொடங்கியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மொராக்கோ உள்பட பிற வட ஆப்பிரிக்க நாடுகளின் சாலைகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. அந்நாட்டில் உள்ள பல … Read more

அய்ன் துபாய்… வந்தது மெகா அப்டேட்… திறக்கப்படும் தேதியும், சர்ப்ரைஸ் ஆஃபரும்!

திருவிழா காலங்களில் ராட்டினம் சுற்றி விளையாடுவது பலருக்கும் பிடித்தமான ஒன்று. கிராமங்களில், பொழுதுபோக்கு பூங்காக்களில் பெரும்பாலும் பார்த்திருப்போம். அதுவும் சிறியதாக அல்லது சற்றே பெரியதாக இருக்கும். அதிகபட்சம் 20, 30 பேர் வரை அமரலாம். இதை பிரம்மாண்டமாக கட்டமைத்து சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு நாடுகளை செய்து வருகின்றன. அய்ன் துபாய் ராட்சத ராட்டினம்அதில் ஒருபடி மேலே சென்று உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் ஒரு ராட்டினத்தை கட்டமைத்தது ஐக்கிய அரபு எமிரேட்ஸ். அங்குள்ள துபாய் … Read more

"பெண் பிள்ளைகள் படிக்கத் தடை.." – தலிபான் அரசின் புதிய அடக்குமுறை

காபூல், ஆப்கானிஸ்தானின் சில பிராந்தியங்களில் பெண் குழந்தைகள் 3ம் வகுப்பிற்கு மேல் படிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10 வயதிற்கும் மேற்பட்ட குழந்தைகளை பள்ளியை விட்டு அனுப்புமாறு பள்ளி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பெண்களுக்கு எதிராக தலிபான் அரசால் விதிக்கப்பட்டு வரும் கட்டுப்பாடுகளுக்கு உலக நாடுகளும், பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தற்போது பெண் பிள்ளைகள் 3ம் வகுப்பிற்கு மேல் படிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. … Read more

14 வயது மாணவரை 25 முறை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியை ! 600 ஆண்டு சிறைதண்டனை?

600 Years Jail May Possible: 74 வயதான அன்னே என். நெல்சன்-கோச் தனது 14 வயது மாணவனை பாலியல் வன்கொடுமை செய்தக் குற்றச்சாட்டில் 600 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்!

பாகிஸ்தான் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு

கராச்சி: பாகிஸ்தானின் ஷஹீத் பெனாசிர்பாத் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து அபோதாபாத் வரை ஹஸாரா எக்ஸ்பிரஸ் ரயில், ஷஹீத் பெனாசிர்பாத் மாவட்டத்தில் உள்ள நவாப்ஷா பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது. நவாப்ஷாவுக்கும் ஷாஹ்தாபூருக்கும் இடையே சஹாரா ரயில் நிலையத்திலிருந்து புறப்புட்டுச் சென்றபிறகு இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த விபத்தில் 22 பேர் சம்பவ இடத்திலேயே … Read more

Tehreek-e-Insab accused of denying permission to meet Imran | இம்ரானை சந்திக்க அனுமதி மறுப்பு தெஹ்ரீக் – இ – இன்சாப் குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சந்திக்க போலீசார் அனுமதி மறுப்பதாக அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானில் 2018 முதல் 2022 வரை பிரதமராக இருந்தவர் இம்ரான் கான், 70. கடந்த ஆண்டு ஏப்ரலில் நடந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததை அடுத்து அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சியின் ஆட்சி … Read more

வட கொரியாவின் ஆயுத தொழிற்சாலைகளில் உற்பத்தியை அதிகரிக்க கிம் ஜாங் உன் உத்தரவு

சியோல், வட கொரியாவின் எச்சரிக்கையை மீறி தென் கொரியா அமெரிக்க படைகளுடன் இணைந்து போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே தென் கொரியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வட கொரிய தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நீடிக்கிறது. இந்த நிலையில் வட கொரியாவின் முக்கிய ஆயுத தொழிற்சாலைகளில் அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் நேரில் சென்று ஆய்வு செய்தார். ராக்கெட் லாஞ்ச்சர்கள், ஏவுகணைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் … Read more