Death of Indian Police Officer in Singapore Shocking Information in Inquiry Report | சிங்கப்பூரில் இந்திய போலீஸ் அதிகாரி மரணம் : விசாரணை அறிக்கையில் திடுக் தகவல்

சிங்கப்பூர் : சிங்கப்பூரில் உயிரிழந்த இந்திய வம்சாவளி போலீஸ் அதிகாரி யுவராஜா கோபால் தெரிவித்த இனப் பாகுபாடு குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தென் கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த யுவராஜா கோபால் 36 என்பவர் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.இவர் சமூக வலைதளமான ‘பேஸ்புக்’கில் சிங்கப்பூர் காவல் துறையில் இனப் பாகுபாடு காரணமாக துன்புறுத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டினார்.இதற்கிடையே சமீபத்தில்தன் வீட்டில் யுவராஜா கோபால் இறந்து கிடந்தார். இனப் பாகுபாடு குறித்து … Read more

அஜித் தோவல் வாங் யீ சந்திப்பு… இணைந்து பணியாற்ற பரஸ்பர மரியாதை – புரிதல் அவசியம்!

சீன கார் நிறுவன BYD திட்டத்தை இந்தியா நிராகரித்த நிலையில், சீனாவைச் சேர்ந்த வாங் யீ, இந்தியாவின் NSA அஜித் தோவலை மாநாட்டின் போது சந்தித்தார்.

புர்ஜ் கலிஃபா டூ அய்ன் துபாய்… வியப்பின் உச்சியில் நிற்க வைத்த UAE… அந்த 5 பிரம்மாண்டங்கள்!

உலகில் செல்வம் கொழிக்கும் நாடுகளில் ஒன்றாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (United Arab Emirates – UAE) திகழ்கிறது. இங்கு பிரம்மாண்டங்களுக்கு பஞ்சம் வைக்காமல் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவை விண்ணை முட்டும் வகையிலும், நவீன தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்தும், அரேபிய கட்டிடக் கலையை உணர்த்தும் வகையிலும், சுற்றுலாவிலும் புதிய அனுபவத்தை அளிக்கும் வகையிலும் இருக்கின்றன. இன்னும் பல திட்டங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. அபுதாபியில் தனி நகரையே கட்டமைக்க தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் … Read more

பிரம்மோஸ் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த முடியவில்லை – உக்ரைன் விமானப் படை வேதனை

கீவ் (உக்ரைன்): பிரம்மோஸ் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த முடியவில்லை. அந்த ஏவுகணைகள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு வளையங்களைத் தாண்டி துல்லியமாக இலக்கை தாக்குகிறது என்று உக்ரைன் விமானப் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து பிரம்மோஸ் என்ற சூப்பர்சானிக் ஏவுகணைகளை தயாரித்து வருகின்றன. இது ஒலியைவிட 5 மடங்கு வேகத்தில் சீறிப் பாயக்கூடியது. இந்த ஏவுகணை இந்தியாவில் பிரம்மோஸ் என்றும் ரஷ்யாவில் ‘பி-800 ஒனிக்ஸ் யாக்ஹான்ட்’ என்றும் அழைக்கப்படுகிறது. ரஷ்யா – உக்ரைன் இடையே … Read more

A married Indian woman went to Pakistan to meet her lover | காதலரை சந்திக்க பாக்., சென்ற திருமணமான இந்திய பெண்

ஜெய்ப்பூர் :சமூக வலைதளத்தில் நட்பாக பழகி காதலித்த பாகிஸ்தான் நாட்டவர், திடீரென உறவை துண்டித்ததால், அவரைக் காண ராஜஸ்தானைச் சேர்ந்த திருமணமான பெண், அந்நாட்டிற்கு சென்றது பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஞ்சு, 34. திருமணமான இவருக்கு 15 மற்றும் 9 வயதில் குழந்தைகள் உள்ளனர்.இவருக்கு, சில மாதங்களுக்கு முன், நம் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த நஸ்ருல்லா, 29, என்பவர் சமூக வலைதளம் வாயிலாக அறிமுகமானார். நட்பாக பழகி வந்த இருவரும் நாளடைவில் … Read more

Indian student brutally beaten to death in Canada | கனடாவில் இந்திய மாணவர் கொடூரமாக அடித்துக் கொலை

டொரன்டோ: கனடாவில், பகுதி நேர வேலை பார்த்துக் கொண்டே படித்து வந்த இந்திய இளைஞரின் காரை திருடிய கும்பல், அவரை கடுமையாக தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தியாவை சேர்ந்தவர் குர்விந்தர் நாத், 24. கடந்த 2021ல், வட அமெரிக்க நாடான கனடாவில், எம்.பி.ஏ., படிப்பதற்காக சென்றார். அங்குள்ள பீட்சா கடையில், ‘டெலிவரி பாய்’ பணியில் பகுதி நேர ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த 9ம் தேதி, மிஸ்ஸிசாகா என்ற இடத்தில் பீட்சா டெலிவரி செய்ய, அதிகாலை … Read more

திருமணம் செய்ய சென்றீர்களா? – கணவனை கைவிட்டு காதலனை சந்திக்க பாகிஸ்தான் சென்ற ராஜஸ்தான் பெண் அளித்த பதில்

லாகூர், பாகிஸ்தானை சேர்ந்த பெண் சீமா ஹைதர் (வயது 30). இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். சீமா ஹைதர் பப்ஜி மொபைல் கேம் விளையாடும் போது உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த சச்சின் மீனா (வயது 23) என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனிடையே, சீமா ஹைதர் தனது கணவரை கைவிட்டு 4 குழந்தைகளுடன் பாகிஸ்தானில் இருந்து நேபாளம் சென்று அங்கிருந்து இந்தியாவிற்குள் நுழைந்துள்ளார். இந்தியாவுக்குள் நுழைந்த … Read more

9 killed in Sudanese plane crash that reached 100 | 100 நாளை எட்டிய சூடான் போர் விமான விபத்தில் 9 பேர் பலி

கெய்ரோ,-சூடானில் நடக்கும் உள்நாட்டுப் போர், 100வது நாளை எட்டிய நிலையில், பயணியர் விமானம் விபத்துக்கு உள்ளானதில், நான்கு ராணுவ வீரர்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர். வட கிழக்கு ஆப்ரிக்க நாடான சூடானில், கடந்த ஏப்ரல் மாதம் முதல், அந்நாட்டின் ராணுவப் படையினருக்கும், துணை ராணுவப் படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த கலவரத்தில், 3,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இரு தரப்புக்கும் இடையே நடக்கும் உள்நாட்டுப் போர், நேற்று முன்தினம், 100வது நாளை எட்டியது. இந்நிலையில், கிழக்கு … Read more

மகன் இறுதி சடங்கில் 9 குழந்தைகள் உள்பட 13 பேரை சுட்டுக்கொன்ற தந்தை….!

கின்சாகா: காங்கோ நாட்டில் நையகோவா என்ற பகுதியை சேர்ந்தவர் முகுவா. கடற்படை வீரரான இவரது மகன் திடீரென இறந்து விட்டார்.இவரது இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஏராளமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். அப்போது திடீரென ஆவேசம் அடைந்த முகுவா தான் வைத்திருந்த துப்பாக்கியால் மகன் இறுதி சடங்கில் பங்கேற்ற கூட்டத்தினர் மீது சரமாரியாக சுட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உயிருக்கு பயந்து நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இந்த துப்பாக்கி சூட்டில் 9 … Read more

Arrest warrant against Imran Khan: Election Commission takes action | இம்ரான்கானுக்கு எதிராக கைது வாரண்ட் : தேர்தல் ஆணையம் அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக அந்நாட்டு தேர்தல் ஆணையம் கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தனது ஆட்சியின் போது அதிகம் சொத்து சேர்த்தது, மற்றும் ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. மேலும் சில வழக்கு தொடர்பாக கடந்த மே மாதம் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆஜராக லாகூரில் இருந்து வந்தார். அப்போது கோர்ட் வெளியே பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையினர், இம்ரான் கானை … Read more