வங்காளதேசம்: ஒரே நாளில் 2,292 பேருக்கு டெங்கு பாதிப்பு; மருத்துவமனையில் அனுமதி
டாக்கா, வங்காளதேசத்தில் சுகாதார சேவைகளுக்கான பொது இயக்குநரகம் வெளியிட்டு உள்ள செய்தியில், நாட்டில் ஞாயிற்று கிழமை காலை வரையிலான கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 2,292 பேருக்கு டெங்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. இந்த நோயாளிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த புதிய நோயாளிகளில் 1,064 பேர் டாக்கா நகரில் உள்ள மருத்துவமனையிலும் மற்றவர்கள் வேறிடங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதே காலகட்டத்தில், டெங்கு பாதிப்புக்கு 9 பேர் உயிரிழந்தனர். இதனால், மொத்த உயிரிழப்பு 176 … Read more