சீனா மீதான இறக்குமதி வரியை 10% குறைத்த ட்ரம்ப்: ஜி ஜின்பிங் உடனான சந்திப்புக்குப் பின் அறிவிப்பு

புசான் (தென்கொரியா): தென் கொரியாவின் புசான் நகரில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 57%ல் இருந்து 47% ஆக அமெரிக்கா குறைத்துள்ளது. ஆசிய – பசிபிக் பொருளாதார உச்சி மாநாடு புசான் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் இடையே, டொனால்டு ட்ரம்ப்பும் ஜி ஜின்பிங்கும் சந்தித்து இருதரப்பு பேச்சவார்த்தை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் … Read more

பிரேசில்: போதை பொருள் கும்பலுக்கு எதிரான நடவடிக்கையில் 64 பேர் பலி

ரியோ டி ஜெனீரோ, பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் போதை பொருள் கும்பலுக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் இணைந்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, போதை பொருள் கும்பலுக்கும், போலீசாருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதுபற்றி ரியோ நகர கவர்னர் கிளாடியோ கேஸ்டிரோ கூறும்போது, போதை பொருள் கும்பலுக்கு எதிராக ஹெலிகாப்டர்கள் … Read more

காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்

நெல்லை, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் இசக்கிபாண்டியன். வழக்கறிஞரான இவர், சில தினங்களுக்கு முன்பு தனது காதலியை கோவையில் உள்ள கோவிலில் திருமணம் செய்துகொண்டார். பின்னர் காதல் ஜோடிகள் இருவரும் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதற்கிடையில், இவர்களின் திருமணத்தை பதிவு செய்ய கோவை உள்ளிட்ட பகுதிகளில் அனுமதி கிடைக்காத நிலையில், சொந்த ஊரான பாளையங்கோட்டையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்வதற்காக இருவரும் வந்திருந்தனர். அப்போது இருவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் அங்கு … Read more

வலிமையான தலைவர் பிரதமர் நரேந்திர மோடி: தென்கொரியாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு

சியோல்: பிரதமர் மோடி வலிமை​யான தலை​வர், அவரை எனக்கு பிடிக்​கும். தாமத​மாகி கொண்​டிருக்​கும் வர்த்தக ஒப்​பந்​தத்​தில் இந்​தி​யா​வும், அமெரிக்கா​வும் கையெழுத்​திடும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி​யுள்​ளார். இந்​தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்​பந்​தம் ஏற்​படு​வ​தில் நீண்ட தாமதம் ஏற்​பட்டு வரு​கிறது. ரஷ்​யா​விடம் இந்​தியா கச்சா எண்​ணெய் வாங்​கிய​தால், அமெரிக்கா 50 சதவீத வரி விதித்​தது. அமெரிக்​கா​விடம் இருந்து சோளம் மற்​றும் சோயாபீன்ஸ் ஆகிய​வற்றை இறக்​குமதி செய்ய வேண்​டும் என அமெரிக்கா வலி​யுறுத்தி வரு​கிறது. ஆனால், … Read more

சூடானில் மருத்துவமனையில் தாக்குதல்; 460 பேர் பலி: உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்

கெய்ரோ சூடான் நாட்டில் துணை ராணுவ படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு டார்பர் பகுதியில் எல்-பாஷர் என்ற இடத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் திடீரென தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள், அவர்களுடைய உறவினர்கள் என மொத்தம் 460 பேர் வரை உயிரிழந்து உள்ளனர் என உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. இது பற்றிய தகவல்களால், ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்து இருக்கிறோம் … Read more

சர்வதேச அமைதிக்கு இரு நாடுகள் இடையே வலுவான உறவு அவசியம்: ஜப்பான் புதிய பிரதமரிடம் மோடி தகவல்

புதுடெல்லி: சர்​வ​தேச அமை​திக்​கும் ஸ்திரத்​தன்​மைக்​கும் இந்​தி​யா, ஜப்​பான் உறவு வலு​வாக இருப்​பது அவசி​யம் என்று புதி​தாக பதவி​யேற்​றுள்ள ஜப்​பான் பிரதமர் சனே தகைச்​சி​யிடம் பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார். ஜப்​பான் நாட்​டின் புதிய மற்​றும் முதல் பெண் பிரதம​ராக சனே தகைச்சி கடந்த 21-ம் தேதி தேர்ந்​தெடுக்​கப்​பட்​டார். இதையடுத்து அவருக்கு பிரதமர் நரேந்​திர மோடி ஏற்​கெனவே எக்ஸ் தளத்​தில் வாழ்த்து தெரி​வித்​திருந்​தார். இந்​நிலை​யில், கடந்த சில தினங்​களுக்கு முன்பு சனே தகைச்சி பிரதம​ராக பதவி​யேற்​றுக் கொண்​டார். இதையடுத்​து, … Read more

காசாவில் இஸ்ரேல் கடுமையாக தாக்குதல்; 46 குழந்தைகள் உள்பட 104 பாலஸ்தீனியர்கள் பலி

காசா, இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்தியதில், இஸ்ரேல் மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டும், சிலர் பணய கைதிகளாக சிறை பிடித்தும் செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். இதன்பின்னர், அமெரிக்கா தலைமையில் நடந்த மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் பலன் ஏற்பட்டது. இதனால், ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதனால், காசா … Read more

இந்திய வம்சாவளி பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் – இங்கிலாந்தை சேர்ந்த நபர் கைது

லண்டன், இங்கிலாந்தில் இந்தியர்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த மாதம் இந்திய வம்சாவளி சீக்கிய பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்நிலையில், இங்கிலாந்தில் மேலும் ஒரு இந்திய இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பஞ்சாப்பை சேர்ந்த இளம்பெண் இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பகுதியில் வசித்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை மாலை வால்சால் நகரில் உள்ள பார்க் ஹால் பூங்கா பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த … Read more

மோடி வலிமையான, போற்றத்தக்க தலைவர்; ஆனால்… – ட்ரம்ப்பின் சூசகப் பேச்சு!

சீயோல்: “இந்தியப் பிரதமர் மோடி வலிமையான, போற்றத்தக்க தலைவர் ஆனால், இந்தியா – பாகிஸ்தான் போர் நான் வர்த்தக ஒப்பந்தம் செய்யமாட்டேன் என்று சொன்னதாலேயே நிறுத்தப்பட்டது.” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார். கடந்த மே மாதம் இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான மோதலை தான் சொன்னதாலேயே இருநாடுகளும் நிறுத்திக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும், மீண்டும் தெரிவித்து வருகிறார். இதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்துவிட்டது. ஆனாலும், ட்ரம்ப் அந்தப் போர் … Read more

பாகிஸ்தான் – ஆப்கன் இடையே மீண்டும் போர் மூளும் அபாயம்

இஸ்தான்புல்: பாகிஸ்​தானும் ஆப்​கானிஸ்​தானும் கடந்த சில ஆண்​டு​களாக எல்​லை​யில் அவ்​வப்​போது போரில் ஈடு​பட்டு வருகின்றன. கடந்த மாதம் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கத்​தார் நாட்​டில் பாகிஸ்​தான், ஆப்​கானிஸ்​தான் இடையே நடைபெற்ற அமைதி பேச்​சு​வார்த்தையின்​படி தற்​காலிக போர் நிறுத்​தம் ஏற்பட்​டது. அடுத்த கட்​ட​மாக துருக்கி நாட்​டின் இஸ்​தான்​புல் நகரில் கடந்த சில நாட்​களாக இரு நாடு​கள் இடையே பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வரு​கிறது. இதில் இது​வரை சுமுக உடன்​பாடு எட்​டப்​பட​வில்​லை. பேச்​சு​வார்த்தை தோல்வி அடைந்​தால் இரு நாடுகள் … Read more