100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்படுத்த நியூசிலாந்து திட்டம்: ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு

வெலிங்டன், காலநிலை மாற்றம் காரணமாக உலக சராசரி வெப்பநிலை அதிகரித்து வருகிறது. அதனை குறைப்பதற்கு உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் 100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை எட்டிய முதல் நாடாக மாற்றுவதற்கு நியூசிலாந்து அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்காக காலநிலை மாற்ற தொழில்நுட்பத்தில் உலகின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனமான பிளாக்ராக் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் அறிவித்தார். இதன் மூலம் காற்று, பசுமை … Read more

டெஸ்லா நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இந்தியர் நியமனம்

வாஷிங்டன், அமெரிக்காவில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் சமீப காலமாக இந்தியர்களுக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவில் இந்திய வம்சாவளியான வைபவ் தனேஜா (வயது 45) தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். அந்த பொறுப்பில் உள்ள சச்சரி கிர்கோர்ன் தனது பதவியை ராஜினாமா செய்ததால் வைபவுக்கு இந்த பதவி வழங்கப்பட்டு உள்ளது. டெல்லி பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பட்டம் பெற்றுள்ள வைபவுக்கு கணக்கியல் துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் … Read more

அணு ஆயுதத்தை நம்பியிருக்க வேண்டாம்: நாகசாகி நினைவு தினத்தில் நகர மேயர் வலியுறுத்தல்

நாகசாகி: கடந்த 1945-ல் இதே நாளில் ஜப்பான் நாட்டின் நாகசாகி நகரின் மீது அமெரிக்கா அணுகுண்டை வீசியது. இந்தத் தாக்குதலின் நினைவு தினமான இன்று அணு ஆயுதத்தை நம்பி உலக நாடுகள் இருக்க வேண்டாம் என நாகசாகி நகர மேயர் ஷீரோ சுசுகி வலியுறுத்தியுள்ளார். ஹிரோஷிமா நகரில் அணுகுண்டை வீசிய மூன்று நாட்களுக்கு பின்னர் நாகசாகி நகரின் மீது அமெரிக்கா அப்போது அணுகுண்டை வீசியது. ஃபேட் மேன் (Fat Man) எனும் அணுகுண்டை அன்றைய தினம் காலை … Read more

அய்யோ… சீனாவுக்கா இந்த நிலைமை… நாசமாக்கிய மழை… வெள்ளக்காடான நகரங்கள்.. அதிகரிக்கும் மரணங்கள்!

சீனாவில் கொட்டித் தீர்க்கும் வரலாறு காணாத மழையால் தலைநகர் பெய்ஜிங் உருக்குலைந்து போயுள்ளது. தொடர் கனமழையால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீனா கனமழைசீனாவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஹெபெய் மகாணங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. பெய்ஜிங் நகரின் மேற்குப் புறநகர் பகுதிகளின் மலைப் பகுதிகளில் பல நாட்களாக பெய்த கனமழையால் இதுவரை 59,000 வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியுள்ளன.சீனா வெள்ளப் … Read more

ஆப்பிரிக்க நாட்டில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 17 பேர் சாவு

பமாக்கோ, மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்படுகிறது. அவர்கள் அப்பாவி மக்கள் மீது தாக்குதல், பொதுச்சொத்துகளை சேதப்படுத்துதல் போன்றவை மூலம் அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். இந்தநிலையில் மாலியின் போடியோ கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 17 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். மேலும் இருவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. தினத்தந்தி Related Tags : பயங்கரவாதிகள் தாக்குதல்  … Read more

பெற்றோரின் சம்மதத்துடன் காதலனை கரம் பிடித்த 10 வயது சிறுமி..! காரணம் என்ன..?

அமெரிக்காவை சேர்ந்த ஒரு 10 வயது குழந்தை தனது காதலனை கரம் பிடித்துள்ளார். இந்த திருமணம் பெற்றோரின் சம்மதத்துடன் நடைப்பெற்றுள்ளது.   

பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த மிஸ் யுனிவர்ஸ் இந்தோனேசியா போட்டியாளர்கள்

ஜகார்த்தா: இந்தோனேசிய நாட்டில் நடைபெற்ற முதலாவது ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தோனேசியா; அழகுப் போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்கள் சிலர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இது தொடர்பாக 6 போட்டியாளர்கள் காவல் துறையில் புகார் தெரிவித்துள்ளதாகவும் போட்டியாளர்களின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அந்நாட்டில் கடந்த மாதம் 29 முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை ஜகார்த்தா நகரில் அமைந்துள்ள பீச் சிட்டி சர்வதேச மைதானத்தில் மிஸ் யுனிவர்ஸ் இந்தோனேசியா போட்டி நடைபெற்றது. சுமார் 30 பேர் இதில் பங்கேற்றனர். இதில் ஃபபியன் … Read more

நாடாளுமன்றத்தை கலைக்க பரிந்துரை… இன்று பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் ராஜினாமா?

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் இன்று தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைக்க  கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது.

Imran finds himself in a prison cell with an open toilet and vermin | திறந்த கழிப்பறை, பூச்சிகள் நிறைந்த சிறை அறையில் அல்லல்படும் இம்ரான்

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் அட்டாக் சிறையில், திறந்த கழிப்பறையுடன், எறும்புகள், பூச்சிகள் நிறைந்த சிறிய அறையில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அடைக்கப்பட்டுள்ளார். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமராக இருந்தவர், இம்ரான் கான் 70. இவர், அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர்; தற்போது, பாக்., தெஹ்ரீக் – இ – இன்சாப் என்ற கட்சியின் தலைவராக உள்ளார். இம்ரான் கானுக்கு எதிராக, கடந்த ஆண்டு ஏப்ரலில், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில், … Read more