Canadian Prime Minister Trudeau separated from his wife | மனைவியை பிரிந்தார் கனடா பிரதமர் ட்ரூடோ

டொரன்டோ: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அவரது மனைவி சோபி கிரிகோரி ஆகியோர் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக, கூட்டாக நேற்று அறிவித்தனர். வட அமெரிக்க நாடான கனடாவின் பிரதமராக, 2015 முதல் பதவி வகித்து வருபவர் ஜஸ்டின் ட்ரூடோ, 51. இவர், தன் சிறு வயது தோழியான சோபி கிரிகோரி, 48, என்பவரை காதலித்து, 2005ல் திருமணம் செய்து கொண்டார். சோபி, ‘டிவி’ நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், விளம்பர மாடலாகவும் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு, சேவியர், 15, … Read more

சிறுவர்கள் ஒரு நாளைக்கு 2 மணி நேரத்துக்கு மேல் ஸ்மார்ட்போன் பயன்படுத்த சீன அரசு கட்டுப்பாடு

பெய்ஜிங்: சீனாவில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது தொடர்பாக புதிய விதிமுறைகளை அந்நாட்டு அரசு உருவாக்கியுள்ளது. குழந்தைகள் அதிக நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் தூக்கமிழப்பு, உடல் பருமன் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உள்ளாவதாக கூறப்படும் நிலையில், சீன அரசு ஸ்மார்ட்போன் பயன்பாடு சார்ந்து புதிய கட்டுப்பாடுகளை உருவாக்கியுள்ளது. இது தொடர்பான வரைவை சீன அரசு கடந்த புதன்கிழமை வெளியிட்டது. அதன்படி, 16 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 2 மணி நேரத்துக்கு … Read more

140 ஆண்டுகளில் இல்லாத மழை… 27 பேர் பலி.. கொட்டும் மழையால் உருக்குலைந்த சீனா!

உலகம் முழுவதும் பருவநிலை மாறுபாடு ஒவ்வொரு மாதிரியாக பிரதிபலித்து வருகிறது. சில நாடுகளில் கொளுத்தும் வெயில், உயரும் வெப்பநிலை, தண்ணீர் பஞ்சம் என மக்கள் வறட்சியை சந்தித்து வருகின்றனர். சில நாடுகளில் கொட்டித் தீர்க்கும் மழையால் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக சீனாவில் கன மழை கொட்டி வருகிறது. சீன தலைநகர் பெய்ஜிங்கில் 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை முதல் கிழமை … Read more

டைட்டைன் நீர்மூழ்கி நிறுவனத்தின் அடுத்த பிளான் இதுதான்..! வீனஸ் கிரகத்துக்கு போலாமா?

OceanGate நிறுவனத்தின்  இணை நிறுவனரான Guillermo Sohnlein, அறிவித்துள்ள அடுத்த சாகச பயணம் தான் தற்போது உலகம் முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.   

பிரேசில் பயங்கரம்… போதைப்பொருள் கும்பல் அட்ராசிட்டி… சீறிய புல்லட்கள்… 43 பேர் சுட்டுக் கொலை!

பிரேசில் நாட்டின் சா பாலோ நகரில் போதைப் பொருள் கடத்தல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால் போதைப் பொருள் கும்பலை சுற்றி வளைத்து பிடிக்க சிறப்பு அதிரடிப் படை போலீசார் திட்டமிட்டனர். இதற்காக ஆபரேஷன் ஷீல்டு என்ற பெயரில் ஒரு திட்டத்தை செயல்படுத்தினர். பிரேசில் ரெய்டு சம்பவங்கள் எங்கு பார்த்தாலும் அதிரடி ரெய்டு, கைது நடவடிக்கைகள் பாய்ந்தன. போதைப் பொருள் கும்பல்கள் சந்திக்கும் இடங்கள் குறித்து உளவுத்துறையிடம் இருந்து போலீசார் ரகசிய தகவல்களை பெற்றனர். … Read more

பெண்களுக்கு ‘ஹார்ட் எமோஜி’ அனுப்பினால் சிறை: சவுதி, குவைத்தில் புதிய சட்டம்

குவைத்: சமூக வலைதளங்களில் அறிமுகமில்லாத பெண்களுக்கு ஹார்ட் எமோஜி அனுப்பினால் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கும் வகையில் புதிய சட்டத்தை சவுதி மற்றும் குவைத் அரசுகள் இயற்றியுள்ளன. வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் மெசெஞ்சர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நம் உணர்வுகளை கீபேட் வழியே வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு எமோஜிக்கள் இடம்பெற்றுள்ளன. அதில் முக்கியமானது ஹார்ட் எமோஜி. காதலர்கள், தம்பதிகள், நண்பர்கள் தங்களுக்குள் அன்பை பரிமாறிக் கொள்ள இந்த எமோஜியை பயன்படுத்துவதுண்டு. இந்த நிலையில், இந்த ஹார்ட் எமோஜியை அறிமுகமில்லாத … Read more

பிலிப்பைன்ஸ் விமான விபத்து: இந்திய மாணவர், பயிற்சியாளர் உயிரிழப்பு

மனிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இந்திய மாணவர் ஒருவரும் அவரது பயிற்சியாளரும் உயிரிழந்தனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் இலோகோஸ் வடக்கு மாகாணத்தில் உள்ள லாவோக் நகரின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து செஸ்னா 152 எனப்படும் ஒரு சிறிய ரக பயிற்சி விமானத்தில் இந்தியாவைச் சேர்ந்த விமானப் பயிற்சி மாணவரான அன்ஷும் ராஜ்குமார் மற்றும் அவருடைய பயிற்சியாளரும் பயணித்துள்ளனர். துகுகேராவ் விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த அந்த விமானம், ககாயன் மாகாணத்தின் அல்காலா … Read more

துப்பாக்கிச்சூடு நடக்கப்போவதாக வந்த அழைப்பு – அமெரிக்க செனட் கட்டடத்தில் பரபரப்பு

வாஷிங்டன், அமெரிக்காவின் யு.எஸ். கேப்பிடோல் போலீசாரின் 911 என்ற அவசர எண்ணிற்கு திடீரென ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் அமெரிக்காவின் செனட் சபை கட்டட வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடக்கப் போவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செனட் கட்டட வளாகத்தில் சோதனை நடத்தினர். மேலும் செனட் கட்டடத்திற்குள் இருக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். எந்நேரமும் துப்பாக்கிச்சூடு நடக்கலாம் என்று கூறப்பட்டதால் அங்கு பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. தொடர்ந்து … Read more

சிறுவர்கள் 2 மணி நேரம் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்தலாம்: சீனாவில் புதிய கட்டுப்பாடு

பெய்ஜிங்: சீனாவில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஸ்மார்ட்போனில் இணையம் பயன்படுத்தும் நேரத்தை நிர்ணயித்து சீன அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சீனாவின் சைபர்ஸ்பேஸ் அமைச்சகம் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஸ்மார்ட்போன்களில் பெரும்பாலான இணைய சேவைகளை பெற முடியாது. மேலும், 16 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு மணி … Read more