68வது மாடியில் இருந்து விழுந்த சாக வீரர் 'டேர் டெவில்' … கடைசி நொடியில் ஜன்னலை தட்டி… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிரெஞ்ச் சாகச வீரர் டேர் டெவில் ரெமி லூசிடி. சாகசங்ளுக்கு பெயர் போனவர். மிக உயரிய கட்டடங்களில் கண்ணிமைக்கும் பொழுதில் ஏறி பிரமிக்க வைப்பார் ரெமி லூசிடி. அவரது இந்த சாகத்திற்காகவே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரது சாக வீடியோக்கள் சமூக வலைதள பக்கங்களில் குவிந்து கிடக்கின்றன. இந்நிலையில் தனது ஓய்வை கழிக்க ஹாங்காங் சென்றுள்ளார் ரெமி லூசிடி. அங்குள்ள ட்ரெகுண்டர் டவருக்கு சென்ற அவர் 40 வது தளத்தில் இருக்கும் தனது நண்பரை பார்க்க … Read more

பாகிஸ்தானில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் பலி எண்ணிக்கை 54 ஆக உயர்வு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணம் பஜூர்கர் நகரில் ஜமியத் உலமா-இ-இஸ்லாம்-பஸல் கட்சியின் மாநாடு நடைபெற்றது. இதில் அந்த கட்சியை சேர்ந்த தலைவர்கள், தொண்டர்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். மாநாடு நடைபெற்று கொண்டிருந்தபோது அங்கு திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து கொண்டு அங்கும், இங்குமாக ஓடினர். மேலும் அந்த இடம் முழுவதும் புகைமண்டலமாக காட்சி அளித்தது. தற்கொலை படை தாக்குதல் இதனையடுத்து அந்த இடம் முழுவதும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு … Read more

சிங்கப்பூர் ஜலசந்தி வழியாக சென்ற கப்பலில் இருந்து காணாமல் போன இந்தியப் பெண்மணி!

இந்திய பெண்மணி காணாமல் போன சம்பவம் குறித்து சிங்கப்பூர் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு (MRCC) காலை 7.50 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது என சிங்கப்பூர் கடல்சார் மற்றும் துறைமுக ஆணையம்  தெரித்துள்ளது.

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சிங்கப்பூர் தூதர் பாராட்டு

புதுடெல்லி: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் சிங்கப்பூரின் 7 செயற்கைக்கோள்கள் நேற்று முன்தினம் விண்ணில் செலுத்தப்பட்டன. இந்த செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக புவிவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டன. இதுகுறித்து இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வாங் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது. சிங்கப்பூரின் 7 செயற்கைக்கோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தி இருக்கிறது. இந்த சாதனையை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டுகிறேன். விண்வெளி துறையில் இந்தியாவும் சிங்கப்பூரும் இணைந்து செயல்படும். இவ்வாறு சைமன் வாங் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் … Read more

வடகொரியாவுக்கு எதிராக முத்தரப்பு உச்சி மாநாடு: அமெரிக்காவில் நடைபெறுகிறது

வாஷிங்டன், அமெரிக்காவின் கேம்ப் டேவிட்டில் வருகிற 18-ந் தேதி முத்தரப்பு உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இதில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளின் உயர்மட்ட அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்காக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அமெரிக்கா செல்ல உள்ளார். இதற்கு முன்னதாக கடந்த மே மாதம் ஜப்பானில் நடந்த ஜி7 மாநாட்டின்போது முத்தரப்பு உச்சி மாநாடு நடைபெற்றது. எனினும் சர்வதேச நிகழ்வுகளுக்கு இடையே அல்லாமல் தனியாக நடைபெறும் முதல் உச்சி மாநாடு இதுவாகும். இந்த … Read more

ஹாங்காங்கில் உயரமான கட்டிடத்தில் ஏறிய பிரான்ஸ் நாட்டின் சாகச வீரர் 68-வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழப்பு

ஹாங்காங்: பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரெமி லுசிடி (30), உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள உயரமான கட்டிடங்கள் மற்றும் பாலங்கள் மீது ஏறி சாகசம் செய்து வந்தார். அந்த வகையில் ரெமி கடந்த வாரம் ஹாங்காங்கில் உள்ள 68 மாடிகளைக் கொண்ட ‘ட்ரெகுன்ட்டர்’ என்ற குடியிருப்பு கட்டிடத்துக்கு சென்றுள்ளார். அங்குள்ள பாதுகாவலர்களிடம் 40-வது மாடியில் உள்ள தன்னுடைய நண்பரை பார்க்கப் போவதாகக் கூறி உள்ளே சென்றுள்ளார். இதுபற்றி, நண்பர் என கூறியவரிடம் பாதுகாவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், … Read more

துருக்கியில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி – 23 பேர் காயம்

அங்காரா, துருக்கியில் கிழக்கு கார்ஸ் மாகாணத்தின் எர்சுரம்-கார்ஸ் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அங்குள்ள காராகுட் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த 50 மீட்டர் ஆழ பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. இதனையடுத்து தகவலின்பேரில் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் இந்த விபத்தில் 7 … Read more

Meaningful devolution is needed, insists Tamil National Federation | அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு தேவை; தமிழர் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தல்

கொழும்பு : ‘-சர்ச்சைக்குரிய 13வது சட்ட திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவதன் வாயிலாக, அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை இலங்கை தமிழர்களுக்கு வழங்க வேண்டும்’ என தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. நம் அண்டை நாடான இலங்கையில் வசித்து வரும் தமிழர்கள், தங்களுக்கான அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டும் என நீண்டகாலமாக கோரி வருகின்றனர். கடந்த 1987ல் இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இலங்கை அரசியல் சட்டத்தில் இதற்கான ’13 ஏ’ சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. தமிழர்களின் … Read more

ஜப்பானில் கானுன் புயலால் 260 விமானங்கள் ரத்து

டோக்கியோ, ஜப்பான் நாட்டின் தெற்கு பகுதியில் கானுன் என்ற புதிய புயல் உருவாகி உள்ளது. இந்த புயல் கடல் வழியாக நகர்ந்து ஒகினாவா மற்றும் அமாமி பகுதியில் கரையை கடக்க உள்ளது. அப்போது 198 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே கனமழை பெய்யும் அபாயம் உள்ளதால் அங்கு தாழ்வான இடங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இந்தநிலையில் கானுன் புயல் … Read more

சாகசம் செய்ய நினைத்து 68-வது மாடியிலிருந்து கீழேவிழுந்து இன்ஸ்டா பிரபலம் பலி..!

ஹாங்காங், பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் ரெமி லூசிடி, 30 வயதான இவர் தீவிர சாகச விளையாட்டுகளில் ஈடுபாடு கொண்டவர். இவர் உயரமான கட்டிடங்களில் சுவர் வழியாக ஏறி சாகசம் செய்வதை வாடிக்கையாக கொண்டவர். மேலும் அதனை புகைப்படங்கள் எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டு வந்துள்ளார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். கடந்த வாரம், இவர் ஹாங்காங்கிற்கு டிரெகன்டர் டவர் எனும் மிக உயரமான கட்டிடத்தில் ஏறி படம் எடுக்க சென்றார். இதற்காக லிப்டில் ஏறி 68-வது மாடிக்கு … Read more