பிரதமர் மோடியை கேள்வி கேட்டதால் ட்ரோல் செய்யப்படும் பெண் பத்திரிகையாளர்: வெள்ளை மாளிகை கண்டனம்

வாஷிங்டன்: இந்தியப் பிரதமர் மோடியிடம் சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்து கேள்வி கேட்டதற்காக வால் ஸ்ட்ரீட் பத்திரிகையின் செய்தியாளர் சப்ரினா சித்திக்கி ட்ரோல் செய்யப்படுவதற்கு வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், இது முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல, ஜனநாயக மரபுகளுக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளது. கேள்வியும் பதிலும்.. அண்மையில் அமெரிக்கா சென்ற இந்தியப் பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் பைடன் உடன் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றார். அப்போது, அவரிடம் அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீன் ஜர்னல் … Read more

Russia intercepted British fighter jets!: Action due to crossing the border | இங்கிலாந்து போர் விமானங்களை தடுத்து நிறுத்திய ரஷ்யா!: எல்லை தாண்டி வந்ததால் நடவடிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ: கருங்கடல் பகுதியில் ரஷ்யா எல்லையில் இங்கிலாந்தின் 2 போர் விமானங்களை ரஷ்யா தடுத்து நிறுத்தியது. இதற்கு, சர்வதேச வான்பரப்பில் வாடிக்கையாக நடக்கும் நிகழ்வு என இங்கிலாந்து அரசு விளக்கம் அளித்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் இடையே ஒராண்டு காலத்திற்கு மேலாக போர் நீடித்து வருகிறது. ரஷ்யா தொடுத்துள்ள போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகள் வழங்கி வருகின்றன. இதற்கிடையே ரஷ்யாவில் உள்நாட்டு கலவரங்கள் நடக்கும் … Read more

ரஷியா-உக்ரைன் போரில் அடுத்து என்ன நடக்கும்? – புதினுக்கு பின்னடைவு என நிபுணர்கள் கருத்து

மாஸ்கோ, ரஷியாவுக்கு எதிரான தனியார் படையின் கிளர்ச்சி 24 மணி நேரத்தில் முடிவுக்கு வந்துவிட்டாலும், ரஷியா-உக்ரைன் போரில் அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்த சம்பவம் அதிபர் புதினுக்கு பின்னடைவாக இருக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தனியார் படை உக்ரைன் மீதான ரஷியாவின் போரில் வாக்னர் குழு என்ற தனியார் கூலிப்படையும் இணைந்து செயல்பட்டது. இந்நிலையில் தங்கள் படை வீரர்களை ரஷிய ராணுவம் கொன்றுவிட்டதாக குற்றம்சாட்டிய தனியார் படை தலைவர் யெவ்ஜெனி பிரிகோசின், … Read more

பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் – பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

வாஷிங்டன்: பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானை அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அமெரிக்கா சென்றபோது, இந்தியா-அமெரிக்கா சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், இந்தியாவை குறிவைத்து தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்தியாவுடன் இணைந்து பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா அறிக்கை வெளியிட்டதால் அதிருப்தி அடைந்த பாகிஸ்தான், இது தொடர்பாக இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதருக்கு சம்மன் அனுப்பியது. இதையடுத்து, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை … Read more

Pakistan Summons US Consul | அமெரிக்க துணை தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்

லாகூர்: பாகிஸ்தான் தன் நிலப்பரப்பை பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், பிரதமர் மோடியும் பேசியிருந்தனர். இந்நிலையில், அவர்களின் கருத்து குறித்து விளக்கம் அளிக்கும்படி, அமெரிக்க துணை தூதருக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பி உள்ளது. லாகூர்: பாகிஸ்தான் தன் நிலப்பரப்பை பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், பிரதமர் மோடியும் பேசியிருந்தனர். இந்நிலையில், அவர்களின் புதிய செய்திகளுக்கு தினமலர் … Read more

இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவு உலக நன்மைக்கான சக்தி: பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

புதுடெல்லி: பிரதமர் மோடி 4 நாள் அரசு முறை பயணமாக கடந்த 20-ம் தேதி அமெரிக்கா சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளிடையிலான வர்த் தகம், பாதுகாப்பு உள்பட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர் அமெரிக்க நாடாளுமன்றத்திலும் பிரதமர் மோடி உரையாற்றினார். இந்த சந்திப்பின் போது இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு அமெரிக்க தொழிலதிபர்களிடையே பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். … Read more

Cases against Wagner chief will not be dropped | வாக்னெர் தலைவர் மீதான வழக்குகள் கைவிடப்படாது

மாஸ்கோ, ‘ரஷ்யாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட, ‘வாக்னெர்’ என்ற தனியார் ராணுவ அமைப்பின் தலைவரான யேவ்கெனி பிரிகோஷின் மீதான வழக்குகள் கைவிடப்படாது’ என, ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு மிகவும் நெருக்கமான யேவ்கெனி பிரிகோஷின், வாக்னெர் என்ற தனியார் ராணுவத்தை நடத்தி வருகிறார். புடினுக்காக, கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போரில், இந்த தனியார் படையும் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், சமீபத்தில் பிரிகோஷின் கிளர்ச்சியில் ஈடுபட்டார். ரஷ்யாவின் முக்கிய … Read more