ரஷியாவில் வெடிமருந்து ஆலை விபத்து – 4 பேர் பலி

மாஸ்கோ, நேட்டோ உடன் உக்ரைன் இணைய விரும்புவதை எதிர்த்து ரஷியா அதன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. 15 மாதங்களுக்கும் மேலாக இந்த போர் நீடித்து வருகிறது. இதனால் இருநாடுகளிலும் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டு வருகிறது. ரஷியாவின் தென்மேற்கின் டாம்போர் பகுதியில் உள்ள கொட்டோவ்ஸ்க் நகரில் வெடிமருந்து தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இதில் தயாரிக்கப்படும் வெடிமருந்துகளை உக்ரைனுக்கு எதிரான போரில் அந்த நாட்டின் ராணுவம் பயன்படுத்தி வந்தது. இதனால் தொழிலாளர்கள் மும்முரமாக வெடிமருந்து தயாரிக்கும் … Read more

அட்லாண்டிக் கடலில் காணாமல் போன Titanic நீர்மூழ்கி கப்பல்… இன்னும் சில மணி நேரங்கள் தான்…!

டைட்டானிக் சிதிலமடைந்த பகுதிகளைக் காணச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் மாயமாகியுள்ள நிலையில், கப்பலில் உள்ளவர்களுக்கு 7 மணி நேரத்துக்கும் குறைவான ஆக்சிஜன் மட்டுமே உள்ளது.

உபநிஷத புத்தகம், விநாயகர் சிலை, வைரக்கல் – பைடன் தம்பதிக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசுகள்

வாஷிங்டன்: பிரதமர் மோடி அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு வெள்ளை மாளிகையில் அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். முன்னதாக வாஷிங்டன் வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மழை பெய்ததை சுட்டிக் காட்டிய பிரதமர் மோடி தனது ட்விட்டரில் இந்திரனின் வரவேற்புடனும், இந்திய சமூகத்தினரின் வரவேற்புடன் வாஷிங்டன் வந்தடைந்தேன் என்று பதிவிட்டிருந்தார். பின்னர் அமெரிக்க அதிபர் ஏற்பாடு செய்திருந்த விருந்த நிகழ்ச்சிக்கு சென்றிருந்த அவரை அதிபர் … Read more

500 விமானங்களை வாங்க இன்டிகோ-ஏர்பஸ் ஒப்பந்தம் – பிரதமர் ரிஷி சுனக் பாராட்டு

லண்டன், இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான இன்டிகோ, இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் உலகின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 500 ‘ஏ320’ ரக விமானங்களை வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளது. இது வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்டிகோ-ஏர்பஸ் இடையிலான இந்த ஒப்பந்தம் இங்கிலாந்தின் விமானத்துறைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இண்டிகோவுடனான ஏர்பஸ் ஒப்பந்தம் … Read more

ஜில் பிடனுக்கு அரிய பச்சை வைரம்… ஜோ பைடனுக்கு சந்தனப்பெட்டி… பிரதமர் மோடியின் பரிசுகள்!

அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் இன்று உரையாற்ற உள்ளார் இந்திய பிரதமர் மோடி. இந்தியாவின் பிரதமர் ஒருவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டாவது முறையாக உரையாற்றுவது இதுவே முதல்முறை.

கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்க்க சென்றபோது 5 பேருடன் சுற்றுலா நீர்மூழ்கி ‘டைட்டன்’ திடீர் மாயம்

நியூஃபவுண்ட்லேண்ட்: இங்கிலாந்தைச் சேர்ந்த டைட்டானிக் கப்பல் கடந்த 1912-ம் ஆண்டு, தனது முதல் பயணத்திலேயே பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 1,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த கப்பல் கனடா அருகே அட்லான்டிக் கடல் பகுதியில் 12,500 அடி ஆழத்தில் மூழ்கி கிடக்கிறது. இந்த கப்பல் பற்றிய ஹாலிவுட் திரைப்படம் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தது. இதனால் நீர்மூழ்கியில் சென்று, ஆழ்கடலில் மூழ்கியிருக்கும் டைட்டானிக் கப்பலை பார்வையிடும் சாகச சுற்றுலாவை அமெரிக்காவைச் சேர்ந்த ஓசன்கேட் என்ற நிறுவனம் மேற்கொண்டது. … Read more

PM Modi gifted diamond to Jill Biden | ஜில் பைடனுக்கு வைரம் பரிசளித்தார் பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு வெள்ளி விநாயகர் சிலையை வைத்த, சந்தன பெட்டியை பிரதமர் மோடி பரிசளித்தார். 3 நாள் அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இன்று (ஜூன் 22) பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் இரவு விருந்து அளிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு பழமையான புத்தகம், மற்றும் பாரம்பரிய காமிரா ஒன்றை பைடன் வழங்கினார். தொடர்ந்து பிரதமர் மோடி … Read more

மியான்மரில் திடீர் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவு

நைபிடா, மியான்மரின் தெற்கு கடற்கரை அருகே இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 2:52 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட பிற பாதிப்பு விவரங்கள் அடங்கிய தகவல்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. தினத்தந்தி Related Tags : மியான்மர்  நிலநடுக்கம்