ப்யூட்டி பார்லர்களுக்கு தடை விதித்த தாலிபான்… போராட்டத்தில் இறங்கிய ஆப்கான் பெண்கள்!

நாடு முழுவதும் உள்ள அழகு நிலையங்களை மூட தலிபான்கள் உத்தரவிட்டதை அடுத்து, பல ஆப்கானிஸ்தான் பெண்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

America is sweltering… Europe is boiling… People are suffering in extreme heat | தகிக்குது அமெரிக்கா… கொதிக்குது ஐரோப்பா.. கடும் வெப்பத்தில் மக்கள் அவதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத வெப்பம் வாட்டி வதைக்கிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். அதீதமான பருவநிலை மாற்றங்கள் உலகம் முழுதும் எதிரொலித்து வருகின்றன. அமெரிக்காவின் கலிபோர்னியா முதல், டெக்சாஸ் மாகாணம் வரை, கடந்த 7 நாட்களாக கடுமையான வெப்பம் பதிவாகி உள்ளது. கடந்த 7 நாட்களில் 860க்கும் மேற்பட்ட, அதிகமாக பதிவான வெப்ப சாதனைகளை அமெரிக்கா முறியடித்துள்ளது. அமெரிக்காவின் அரிசோனா மாகாண தலைநகரான … Read more

உலகை அழிக்கும் எமன் ஆகிவிட்டேன்: அணுகுண்டு கண்டுபிடித்த விஞ்ஞானி வேதனை

ஓபன்ஹைமர் கடந்த 1904-ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க்கில் பிறந்தார். இவரது குடும்பத்தினர் அமெரிக்காவில் வந்து குடியேறிய ஜெர்மன்-யூதர்கள். ஓபன்ஹைமரின் தாய் ஓவியர், தந்தை ஜவுளி இறக்குமதியாளர். பள்ளியில்படிக்கும் போதே மிகவும் திறமைசாலியாக விளங்கிய ஓபன்ஹைமர், பள்ளி இறுதியாண்டு படிப்பை முடிப்பதற்கு முன்பே ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பட்டப்படிப்பில் சேர்ந்து விட்டார். காட்டின்ஜென் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி பட்டம் பெற்றபின், கலிபோர்னியா தொழில்நுட்ப கழகத்தில் கடந்த 1927-ம் ஆண்டு தனது கூட்டு ஆய்வுப் பயிற்சியை தொடங்கினார். பின்னர் பெர்கிலியில் உள்ள … Read more

Moon day | உலக நிலா தினம்

அமெரிக்காவின் ‘நாசா’ 1969 ஜூலை 16ல் அனுப்பிய ‘அப்பல்லோ-11’ விண்கலம் நிலவுக்கு சென்றது. இதில் கமாண்டர் நீல் ஆம்ஸ்ட்ராங், பைலட் மைக்கேல் காலியன்ஸ், பைலட் எட்வின் ஆல்ட்ரின் பயணித்தனர். இது ஜூலை 20ல் நிலவில் இறங்கியது. விண்கலத்தில் இறங்கி நிலவில் காலடி வைத்து நீல் ஆம்ஸ்ட்ராங் சாதனை படைத்தார். இத்தினத்தை உலக நிலவு தினமாக ஐ.நா., சார்பில் கடைபிடிக்கப்படுகிறது. அமெரிக்காவின் ‘நாசா’ 1969 ஜூலை 16ல் அனுப்பிய ‘அப்பல்லோ-11’ விண்கலம் நிலவுக்கு சென்றது. இதில் கமாண்டர் நீல் … Read more

தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்த புத்தகம் விற்பனை செய்த கடைக்கு ரூ.29 லட்சம் அபராதம்

புடாப்செட், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஹங்கேரியின் 2வது மிகப்பெரிய புத்தக நிறுவனம் லிரா கொனுவ். இந்த புத்தக நிறுவனம் ஹங்கேரியின் பல்வேறு நகரங்களில் புத்தக விற்பனை நிலையங்களை திறந்துள்ளது. இந்த புத்தக விற்பனை நிலையங்களில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்த புத்தகத்தை விற்பனை செய்ததாக அந்த புத்தக கடைக்கு 27 ஆயிரத்து 500 பவுண்ட் (இந்திய மதிப்பில் 29 லட்சத்து 26 ஆயிரத்து 146 ரூபாய்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ‘ஹாட்ஸ்டாபர்’ … Read more

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நாளை இந்தியா வருகை

புதுடெல்லி: இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நாளை இந்தியா வருகிறார். பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நாளை புதுடெல்லி வருகிறார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்திக்கும் அவர், பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இலங்கை அதிபராக கடந்த ஆண்டு ஜூலையில் பதவி ஏற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் இந்திய பயணம் இது. ரணில் விக்ரமசிங்கேவின் … Read more

''வெப்ப அலைகளை எதிர்கொள்ள உலகம் தயாராக வேண்டும்''- ஐ.நா எச்சரிக்கை..!!

நியூயார்க், ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் வெயில் சுட்டெரித்து வருகிறது. வெப்ப அலை காரணமாக மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். அவர்கள் கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்குப் படையெடுத்து வருகிறார்கள். வெப்ப அலையால் பலருக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் தெற்கு ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் காட்டுத் தீ பரவி வருகிறது. இதில் கிரீஸ் நாட்டின் முக்கிய பகுதியும் அடங்கும். புவி வெப்பமடைதலின் விளைவுகளை நினைவூட்டும் வகையில், வட அமெரிக்காவிலிருந்து ஐரோப்பா மற்றும் ஆசியா வரை … Read more

ஏஐ தொழில்நுட்பத்தால் மனித சமூகத்துக்கு ஆழமான உளவியல் பாதிப்பு: ஐ.நா. எச்சரிக்கை

நியூயார்க்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயங்கரவாத அமைப்புகள் பயன்படுத்தும்போது நம்மால் கற்பனை செய்ய முடியாத ஆழமான உளவியல் பாதிப்புகள் ஏற்படும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டோனியா குத்தரேஸ் எச்சரித்துள்ளார். உலக நாடுகளில் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் நன்மை, தீமைகள் பற்றிய விவாதங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை கவனத்தில் கொண்டு இது தொடர்பான விவாதக் கூட்டங்களை ஐக்கிய நாடுகள் சபை கடந்த சில மாதங்களாகவே நடத்தி வருகிறது. அந்த வகையில், அமெரிக்காவின் நியூயார்க்கில் நேற்று … Read more

Protests of Indian origin in Germany | இந்திய வம்சாவளியினர் ஜெர்மனியில் போராட்டம்

பிராங்பேர்ட்:ஜெர்மனி அரசுக் காப்பகத்தில் உள்ள, இந்தியாவைச் சேர்ந்த இரண்டு வயது குழந்தை அரிஹா ஷாவை, அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கக் கோரி, அந்நாட்டில், இந்திய வம்சாவளியினர் போராட்டம் நடத்தினர். நம் நாட்டின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பாவேஷ் ஷா- என்பவர், மனைவி தாரா உடன், தொழில் நிமித்தமாக, மேற்கு ஐரோப்பிய நாடான ஜெர்மனிக்கு சென்றார். இந்த தம்பதிக்கு, அரிஹா ஷா என்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பரில், குழந்தை அரிஹா ஷாவுக்கு, பிறப்புறுப்பில் ரத்தம் … Read more

கஞ்சா வைத்திருந்ததாகப் பிரபல மாடல் அழகி கைது…!

வாஷிங்டன், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி ஜிகி ஹடிட், தனது நண்பர்களுடன் கேமன் தீவுகளுக்குத் தனியார் விமானம் மூலம் சென்றார். ஓவன் ராபர்ட்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் ஜிகி ஹடிட் மற்றும் நண்பர்களின் உடைமைகளைச் சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் கஞ்சா மற்றும் கஞ்சாவைப் புகைக்கப் பயன்படுத்தப்படும் கருவிகள் இருந்தது. இதையடுத்து ஜிகி ஹடிட்டும், அவரது நண்பர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்குப் பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி … Read more