முன்னாள் காதலனின் வன்மம்! பெண்ணுக்கு 99 பில்லியன் இழப்பீடு! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Texas Revenge Prn Case: டெக்சாஸ் பழிவாங்கும் ஆபாச வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 99 பில்லியன் ரூபாய் இழப்பீடு கிடைக்கும்

ராமர் கதை சொற்பொழிவைக் கேட்ட பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் சிலாகிப்பு

லண்டன்: புகழ்பெற்ற ராமர் கதை சொற்பொழிவாளரான முராரி பாபுவின் சொற்பொழிவில் பங்கேற்ற பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், தனது மத நம்பிக்கை தனது நாட்டுக்காக சிறப்பாக பாடுபடத் தேவையான வலிமையை தனக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார். குஜராத்தைச் சேர்ந்த ஆன்மிக சொற்பொழிவாளரும், வட இந்தியாவில் செல்வாக்கு மிக்க ஆன்மிக தலைவராகவும் உள்ள முராரி பாபுவின் ஆன்மிக சொற்பொழிவு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஜீசஸ் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. பகவான் ராமரின் கதையை முராரி பாபு சொற்பொழிவாக வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அந்நாட்டின் … Read more

அரபு நாடுகளில் புதிதாக திறக்கப்படும் இந்தியப் பள்ளிகள்.. மத்திய அரசு சூப்பர் முடிவு!

துபாய்: அரபு நாடுகளில் வசிக்கும் இந்திய சமூகத்தினர், அங்கு புதிதாக இந்தியப் பள்ளிகளை திறக்க மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு உதவி செய்து வருவதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் என பல வெளிநாடுகளில் இந்தியர்கள் கணிசமாக வாழ்ந்து வந்தாலும், அரபு நாடுகளில்தான் மிக அதிகமாக இந்தியர்கள் வசித்து வருகின்றனர். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள், கத்தார், குவைத் போன்ற அரபு நாடுகளில் பணிபுரிய செல்கின்றனர். அவ்வாறு செல்பவர்களில் பலர், சில வருடங்களில் தங்கள் குடும்பத்தினரையும் … Read more

ஈரானிய திரைப்பட இயக்குநர் சயீத் ரூஸ்டேவுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை

டெஹ்ரான்: ஈரானைச் சேர்ந்த முன்னணி இயக்குநர் சயீத் ரூஸ்டேவுக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டில் உள்ள நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது. சயீத் ரூஸ்டே இயக்கிய திரைப்படம் ‘லைலா’ஸ் பிரதர்ஸ்’. இப்படத்தில் சில சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றதால் இப்படத்துக்கு கடந்த ஆண்டு ஈரான் அரசு தடை விதித்தது. டெஹ்ரானில் நிலவும் பொருளாதார பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் ஒரு குடும்பத்தின் கதையை இப்படம் பேசுகிறது. இந்தச் சூழலில் இப்படம் கடந்த ஆண்டு நடைபெற்ற கேன்ஸ் சர்வதேச திரைப்பட … Read more

லிபியாவில் ஆயுதக் குழுவினர் மோதல்: 27 பேர் பலி| 27 killed, 106 injured following clashes in Libya Read

திரிபோலி: லிபிய தலைநகர் திரிபோலியில் இரண்டு ஆயுதக்குழுவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 27 பேர் உயிரிழந்தனர். 106க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 444 பிரிகேட் என்ற பிரிவின் தலைவர் மெக்மூத் ஹமாசாயின் பயணத்தை தடுத்து நிறுத்தியதால் மோதல் ஏற்பட்டது. திரிபோலி: லிபிய தலைநகர் திரிபோலியில் இரண்டு ஆயுதக்குழுவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 27 பேர் உயிரிழந்தனர். 106க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 444 பிரிகேட் புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை … Read more

ராம கதை கேட்க ஒரு ஹிந்துவாக வந்துள்ளேன்: ரிஷி சுனக்| British PM Rishi Sunak attends Ram Katha at Cambridge, says here as Hindu

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: லண்டனில் கேம்ப்ரிட்ஜ் பல்கலை வளாகத்தில் நடந்த ராமகதை உபன்யாசத்தில், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கலந்து கொண்டார். அங்கு அவர் கூறுகையில், நான் இங்கு பிரதமராக வரவில்லை. ஹிந்துவாக வந்துள்ளேன் என்றார். ஆன்மிக தலைவரான மொராரி பாபு, கேம்ப்ரிட்ஜ் பல்கலை வளாகத்தில் ராமகதை தொடர்பான உபன்யாசம் நிகழ்த்தி வருகிறார். கடந்த 12ம் தேதி துவங்கிய இந்த நிகழ்ச்சி, வரும் 20ம் தேதி நிறைவு பெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு … Read more

ஹவாய் காட்டுத் தீ | உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக உயர்வு

லைஹானா: அமெரிக்காவின் ஹவாய் தீவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அமெரிக்காவின் ஹவாய் தீவில், கடந்த சில தினங்களுக்கு முன்பு காட்டுத் தீ உருவானது. சுற்றுலா தலமான லைஹானா நகருக்குள் தீ மிக வேகமாகப் பரவியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிடங்கள், வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன. தீ கட்டுக்கடங்காமல் பரவியதில் சுமார் 2,200 கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. இதில் 86 … Read more

துப்பாக்கிச்சூடு- பலி 26; நைஜீரியாவில் கொடூரம்| Shooting: Kills 26 in Nigerias Atrocity

கானோ: நைஜீரியாவில் ராணுவ வாகனம் மீது கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 23 பேர் உட்பட 26 பேர் பலியாயினர். நைஜீரியா நாட்டின் மத்தியிலுள்ள ஆம்புஷ் பகுதியில் ராணுவத்தினருக்கும் கொள்ளையர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. ராணுவ வாகனம் மீது நடந்த துப்பாக்கிச்சண்டையில் மூன்று ராணுவ அதிகாரிகள் உட்பட 23 வீரர்கள் பொதுமக்கள் மூவர் உட்பட 26 பேர் பலியாயினர். எட்டு ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச் சண்டையில் பலியான வீரர்களின் உடல்களை மீட்க சென்ற நைஜீரிய விமானப்படையின் … Read more