பெரு நாட்டில் பஸ் மீது லாரி மோதி 2 பேர் பலி: 20 பேர் படுகாயம்

லிமா, தென் அமெரிக்க நாடான பெருவின் வடக்கு பான்-அமெரிக்க நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அன்காஷ் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.இதனால் நிலைதடுமாறி எதிரே வந்த பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் லாரி டிரைவர் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பஸ்சில் இருந்த 20 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தினத்தந்தி Related Tags … Read more

நடுவானில் அமெரிக்காவுக்கு பயத்தை காட்டிய ரஷ்யா… சிரிய வான் பரப்பில் நடந்த பரபரப்பு சம்பவம்!

வல்லரசு நாடுகளான அமெரிக்காவும் ரஷ்யாவும் எலியும் பூனையுமாக உள்ளன. மற்ற நாடுகளுடனான தொடர்பில் கூட இருநாடுகளுக்கும் இடையிலான மோதலே வெளிப்பட்டு வருகிறது. தற்போது ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரில் கூட அமெரிக்கா ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே உக்ரைனுக்கு ஆயுதங்களை அமெரிக்க அரசு விநியோகம் செய்து வருகிறது. சமீபத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் வேண்டுகளுக்கு இணங்க கொத்து குண்டுகளையும் வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. ஆபத்தான கொத்துக்குண்டுகளை உக்ரைனுக்கு வழங்குவதாக அமெரிக்கா அறிவித்திருப்பது … Read more

16 போர்க்கப்பல்கள், 73 போர் விமானங்கள்… தைவானை முற்றிலுமாக சுற்றி வளைத்த சீனா!

சீனா தைவான் மோதல்: தைவானைச் சுற்றி சீனாவின் ராணுவ நடவடிக்கைகள் வேகமாக அதிகரித்துள்ளன. தைவான் மீதான சாத்தியமான தாக்குதலுக்கான முன்னேற்பாடு இது என்று நிபுணர்கள் இதைப் பார்க்கின்றனர். 

Daily flight service started between Chennai-Jaffna | சென்னை-யாழ்ப்பாணம் இடையே தினசரி விமான சேவை துவங்கியது

கொழும்பு: சென்னை மற்றும் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்திற்கும் இடையேயான விமான சேவையை, தினசரி சேவையாக மாற்றி வழங்க துவங்கியுள்ளது, ‘அலையன்ஸ் ஏர்’ நிறுவனம். சென்னைக்கும், இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான யாழ்ப்பாணத்திற்கும் இடையே, தற்போது வாரத்தில் நான்கு நாட்கள், விமான சேவைகளை அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் வழங்கி வருகிறது. இந்நிலையில், இந்த விமான சேவைகள் அதிகரிக்கப்படும் என, இந்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, சமீபத்தில் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, கடந்த … Read more

Today, the UN is talking about artificial intelligence. crowd | இன்று செயற்கை நுண்ணறிவு தொடர்பாக ஐ.நா. கூட்டம்

நியூயார்க்: செயற்கை நுண்ணறிவு தொடர்பாக முதல் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று நடக்கிறது. வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உலக பொருளாதாரத்துக்கும், சர்வதேச பாதுகாப்புக்கும் எவ்வாறு பயன்படுத்துவது என்று பல்வேறு உலக நாடுகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான முதல் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று நியூயார்க் நகரில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு பிரிட்டன் வெளியுறவுத் துறை செயலாளர் ஜேம்ஸ் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் செயற்கை … Read more

பிரம்மாண்டமான ரியல் எஸ்டேட் நிறுவனம் எவர்கிராண்டே நஷ்டம் எவ்வளவு? $96 பில்லியன்

Real Estate Heavy Loss: சீனாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனம் எவர்கிராண்டே, 96 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான கடன்களில் மூழ்கியிருக்கிறது

பூமியின் வட துருவத்தில் நிகழ்ந்த மாற்றம்… தாங்க முடியாத சூடு… ஏன் என்னாச்சு தெரியுமா?

பூமியின் வட துருவத்தில் தாங்க முடியாத சூடு. சராசரி வெப்பநிலை தாறுமாறாக எகிறிவிட்டது. இது பல்வேறு சுகாதார குறைபாடுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி காட்டுத்தீ நிகழ்வுகளை உண்டாக்கி வனப்பகுதியை பேரழிவின் விழிம்பை நோக்கி தள்ளி கொண்டிருக்கிறது. சீனாவை வதைக்கும் வெயில்… அதிகரிக்கும் வெப்பநிலை இத்தகைய பாதிப்புகள் ஓரிரு நாடுகளில் மட்டுமல்ல. பல்வேறு கண்டங்களில் காணப்படுகிறது. வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா என வட துருவத்தில் உள்ள கண்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அடுத்த சில நாட்களில் மேற்குறிப்பிட்ட இடங்களில் … Read more

பிரபஞ்சத்தின் வயது 13.7 பில்லியன் ஆண்டுகள் அல்ல: விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்திய புதிய ஆய்வு

ஒட்டாவா: நமது பிரபஞ்சத்தின் வயது முந்தைய ஆய்வுகளின் படி கணிக்கப்பட்டதைவிட இரண்டு மடங்கு அதிகமானதாக இருக்கலாம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு பிரபஞ்சத்தின் வயதை மதிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படும் தற்போதைய பிரபஞ்சவியல் மாதிரிக்கு சவாலாக அமைந்துள்ளது. கடந்த காலங்களில், விஞ்ஞானிகள் நமது பிரபஞ்சத்தின் வயதை ‘பிக் பேங்’ எனப்படும் பெருவெடிப்பிலிருந்து காலத்தை அளவிடுவதன் மூலமும், தொலைதூர விண்மீன் திரள்களிலிருந்து ஒளியின் சிவப்பு மாற்றத்தின் (Redshift) மூலம் பழமையான நட்சத்திரங்களைப் ஆய்வு செய்வதன் மூலமும் மதிப்பிட்டு … Read more

Two cars collide: 6 killed | இரண்டு கார்கள் மோதல்: 6 பேர் பலி

வாஷிங்டன்: அமெரிக்காவில் வாஷிங்டனில் இரண்டு கார்கள் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் பலியாகினர். மேலும் 3 பேர் காயம் அடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வாஷிங்டன்: அமெரிக்காவில் வாஷிங்டனில் இரண்டு கார்கள் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் பலியாகினர். மேலும் 3 பேர் காயம் அடைந்து, புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் Advertisement

166 ஆண்டுகளுக்கு முன்பே காலநிலை மாற்றத்தை கணித்த யூனிஸ் நியூட்டன்: டூடுள் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்

166 ஆண்டுகளுக்கு முன்னரே காலநிலை மாற்றத்தை கணித்தவரான யூனிஸ் நியூட்டன் பிறந்த தினத்தை ( ஜூலை 17, 1819) கூகுள் டூடுள் வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளது. உலகளவில் தொழிற் புரட்சி முன்னோக்கி சென்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த யூனிஸ் நியூட்டன் என்ற பெண்மணி தனது ஆராய்ச்சிகள் மூலம் தொழிற் வளர்ச்சியின் காரணமாக வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு எவ்வாறு பூமி வெப்பமடைய காரணமாகிறது என்பதை கூற முயன்று கொண்டிருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட குறுகிய … Read more