"எங்களிடம் போதிய அளவு க்ளஸ்டர் குண்டுகள் உள்ளன" – புதின் எச்சரிக்கை

மாஸ்கோ: “எங்களிடம் போதிய அளவு க்ளஸ்டர் குண்டுகள் (வெடிபொருட்கள்) உள்ளன” என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இது குறித்து ரஷ்ய அதிபர் புதின் நேர்காணல் ஒன்றில் பேசும்போது, “ரஷ்யாவில் க்ளஸ்டர் குண்டுகள் போதிய அளவு கையிருப்பில் இருக்கின்றன. உக்ரைனில் உள்ள ரஷ்யப் படைகளுக்கு எதிராக இதுபோன்ற வெடி மருந்துகளை உக்ரைனால் பயன்படுத்தப்பட்டால், அவற்றைப் பயன்படுத்த மாஸ்கோவுக்கு உரிமை உள்ளது” என்று அவர் பேசினார் முன்னதாக, அமெரிக்காவிடமிருந்து க்ளஸ்டர் குண்டுகளை உக்ரைன் பெற்றுள்ளது. 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் … Read more

தென் கொரியாவில் தொடர்மழை: பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு.! ரெயில் சேவைகள் நிறுத்தம்

சியோல், வெள்ளக்காடான நகரங்கள் தென் கொரியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள நோன்சான், யோங்ஜூ உள்ளிட்ட 13 நகரங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. சூங்சாங் மாகாணத்தில் பல அணைகள் நிரம்பி வழிகின்றன. எனவே அங்குள்ள கோசன் அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வெள்ளப்பெருக்கால் செஜோங் பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல வீடுகள், கட்டிடங்கள் மண்ணில் புதையுண்டன. இதில் 20 பேர் … Read more

ஈரானில் மீண்டும் அமலானது ஹிஜாப் கெடுபிடி – கண்காணிப்பை தீவிரப்படுத்தியது சிறப்பு ரோந்துப் படை

டெஹ்ரான்: ஈரானில் மீண்டும் ஹிஜாப் கெடுபிடி அமலாகியுள்ளது. இதனையடுத்து பெண்கள் தங்கள் முகம், தலையை முழுமையாக மறைக்கும்படி ஹிஜாப் அணிகிறார்களா என்பதைக் கண்காணிக்கும் சிறப்பு ரோந்துப் படையினர் தங்களின் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் மாஷா அமினி மரணத்துக்குப் பின்னர் வெடித்த ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டங்கள் சற்றே தளர்ந்த நிலையில் தற்போது மீண்டும் ஹிஜாப் கெடுபிடி வேகமெடுத்துள்ளது. யார் இந்த மாஷா அமினி? ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் … Read more

இங்கிலாந்தில் அரசியலை விட்டு விலகும் பாதுகாப்பு துறை மந்திரி

லண்டன், இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு தற்போது பாதுகாப்பு மந்திரியாக உள்ளவர் பென் வாலஸ் (வயது 53). இந்தநிலையில் அடுத்து வரும் தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என அவர் அறிவித்துள்ளார். இவர் போரிஸ் ஜான்சன், லிஸ் டிரஸ் மற்றும் ரிஷி சுனக் ஆகிய 3 பிரதமர்களின் கீழ் பாதுகாப்பு மந்திரியாக பணியாற்றி உள்ளார். அனுபவம் வாய்ந்த பென் வாலஸ் அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளது பிரதமர் ரிஷி சுனக்குக்கு பேரிழப்பாக கருதப்படுகிறது. … Read more

விமானிக்கு திடீர் உடல்நலக் குறைவு! பாதுகாப்பாய் தரையிறக்கிய 68 வயது பெண்

Crash Landing Plane By 68 Year Women: விமானிக்கு நடுவானில் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, 68 வயதான பெண், விமானத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இஸ்ரேல் பாதுகாப்புப் படையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் – தாக்கம் என்ன?

டெல் அவிவ்: இஸ்ரேல் பாதுகாப்புப் படை ஏஐ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ராணுவத்தில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. வான்வழித் தாக்குதலின்போது இலக்குகளை தேர்வு செய்தல், போருக்கான தளவாடங்களை முறைப்படுத்துதல் போன்ற பணிகளில் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இஸ்ரேல் – பாலஸ்தீன விவகாரத்தில் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் மறைமுகமாக ஆயுதங்கள் வழங்கி வருவதாக இஸ்ரேல் நீண்ட காலமாகவே குற்றம் சுமத்தி வருகிறது. இதன் காரணமாகவும் இஸ்ரேல் – ஈரான் இடையே மோதல் போக்கு நிலவுகிறது. இந்நிலையில், சமீப … Read more

Powerful earthquake in Argentina | அர்ஜெண்டினாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பியானோஸ்: அர்ஜெண்டினாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவாகியுள்ளது. அண்டை நாடான சிலியிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நேற்று அமெரிக்காவின் அலாஸ்கா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு, சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு இருந்தது. பியானோஸ்: அர்ஜெண்டினாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவாகியுள்ளது. அண்டை நாடான சிலியிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நேற்று அமெரிக்காவின் புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் … Read more

வடகொரியா அச்சுறுத்தல் காரணமாக ஜப்பான் கடல்பகுதியில் முத்தரப்பு போர்ப்பயிற்சி

டோக்கியோ, கொரிய தீபகற்ப பகுதியில் தொடர் அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் வடகொரியா பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி கடந்த வாரம் ஹ்வாசாங்-18 என்ற கண்டம் விட்டு கண்டம் செல்லும் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியாவை சேர்ந்த 4 தனிநபர்கள் மற்றும் 3 நிறுவனங்கள் மீது தென்கொரியா தடை விதித்தது. இந்தநிலையில் தற்போது ஜப்பான் கடல் பகுதியில் அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகியவை இணைந்து முத்தரப்பு போர்ப்பயிற்சியை … Read more