30 வயதான சமூக வலைதள ஃபிட்னஸ் பிரபலம் ஜோ லின்ட்னர் காலமானார்
30 வயதான சமூக வலைதள ஃபிட்னஸ் பிரபலம் ஜோ லின்ட்னர் காலமானார். அவருக்கு அனீரிசிம் பாதிப்பு ஏற்பட்டது அவரது மரணத்திற்கு காரணம் என தெரிகிறது. இதனை அவரது காதலி சமூக வலைதள பதிவில் உறுதி செய்துள்ளார். ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஜோ லின்ட்னரை இன்ஸ்டாகிராம் தளத்தில் சுமார் 8.5 மில்லியன் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். யூடியூப் தளத்தில் சுமார் 1 மில்லியன் பேர் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர். ஃபிட்னஸ் சார்ந்த ஆலோசனைகளை அவர் அதில் பகிர்ந்து வந்தார். … Read more