பராகுவேயில் இருந்து ரஷியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ள 2 முக்கிய குற்றவாளிகள்

அசன்சியன், ரஷியாவில் கொலை, சட்ட விரோத ஆயுத கடத்தல், மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டவர் ஆண்ட்ரி ஆண்ட்ரீவ். இவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து கடந்த 2000-ம் ஆண்டு முதல் ரஷிய போலீசார் தேடி வருகின்றனர். இந்தநிலையில் பராகுவே நாட்டில் 2011-ம் ஆண்டு அவர் கைதானார். போதைப்பொருள் கடத்தல் குற்றத்துக்காக அங்கு ஆண்ட்ரிக்கு தண்டனை வழங்கப்பட்டது. கடந்த மார்ச் மாதத்துடன் இவரது தண்டனைக்காலம் முடிவடைந்தது. எனவே அவரை ரஷியாவிடம் ஒப்படைக்க பராகுவே அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அறிக்கை … Read more

Imran Khan is a dangerous man, warns Pakistan Army Minister | இம்ரான் கான் ஆபத்தான மனிதர் பாக்., ராணுவ அமைச்சர் எச்சரிக்கை

இஸ்லாமாபாத், ”முன்னாள் பிரதமர் இம்ரான் கான், வெளிநாடுகளில் உள்ள நம் எதிரிகளை விட மிக ஆபத்தான மனிதர்,” என, பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் க்வாஜா ஆசிப் கூறினார். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் ராணுவ அமைச்சர் க்வாஜா ஆசிப், பாக்., செய்தி நிறுவனத் திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: வெளிநாடுகளில் உள்ள நம் எதிரிகள் யார் என்பது நமக்கு தெரியும். ஆனால், நம் நாட்டிற்குள்ளேயே நமக்கு எதிரிகள் உள்ளனர். அவர்கள் நம்மிடையே உலவுகின்றனர். அவர்களை நம்மால் எளிதில் … Read more

ஜப்பானில் தொடர்ந்து பிறப்பு விகித சராசரி 1.26 ஆக குறைவு..!!

டோக்கியோ, ஜப்பானின் பிறப்பு விகிதம் 2022 ஆம் ஆண்டில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக 1.26 ஆகக் குறைந்துள்ளது என்று அந்நாட்டு காதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அரசு பல சலுகைகளை அறிவித்தாலும் குழந்தை பெற்றுக்கொள்வது குறைந்து வருகிறது. இதனால் வரும் 2030-க்குள் ஜப்பானின் மக்கள்தொகை அதல பாதாளத்திற்கு சென்று விடும் என அஞ்சப்படுகிறது. 125 மில்லியனுக்கும் அதிகமான ஜப்பானின் மக்கள்தொகை 16 ஆண்டுகளாக குறைந்து வருகிறது. 2070ஆம் ஆண்டு 87 மில்லியனாக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தினத்தந்தி Related … Read more

Declining birthrate: Japan in deep trouble | குழந்தை பிறப்பு சரிவு: கடும் சிக்கலில் ஜப்பான்

டோக்கியோ, ஜப்பானில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. கடந்த, 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, குழந்தை பிறப்பு விகிதம் கடுமையாக சரிந்துள்ளது. கிழக்காசிய நாடான ஜப்பானில், குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ‘இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும். இல்லாவிட்டால், 2030ம் ஆண்டில் இளைஞர்களின் எண்ணிக்கை கடுமையாக குறைந்துவிடும்’ என, அந்த நாட்டின் பிரதமர் புமியோ கிஷிடோ சமீபத்தில் தெரிவித்தார். குழந்தைப் பிறப்பை ஊக்குவிக்கும் … Read more

சுவீடனில் உடலுறவு விளையாட்டுக்கு அங்கீகாரம்… விரைவில் சாம்பியன்ஷிப் போட்டி

ஸ்டாக்ஹோம், உலகின் பல்வேறு நாடுகளில் உடலுறவு, தன்பாலின ஈர்ப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பொதுவெளியில் பேசுவதற்கும், சினிமாவில் காட்டுவதற்கும் கடுமையான தடைகள் நிலவுகின்றன. இந்தியாவைப் போன்ற நாடுகளில் தற்போது ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவான சட்டங்கள் நிறைவேறி வரும் நிலையில், இதற்கான எதிர்ப்பு குரல்களும் எழுந்த வண்ணம் இருக்கின்றன. அதே சமயம் மேற்கத்திய நாடுகள், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் பாலியல் கல்வி குறித்தும், தன்பாலின உறவு குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அதிக முனைப்பு காட்டப்படுகிறது. குறிப்பாக ஜூன் மாதத்தை … Read more

கனடா நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் கட்டுக்கடங்காமல் பரவலாக பரவி வரும் காட்டுத்தீ..!

கனடா நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் பரவலாக காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. வழக்கமாக கோடை காலத்தில் ஏற்படும் காட்டுத்தீக்களை விட இந்தாண்டு பத்து மடங்கு வேகமாக தீ ஏற்பட்டுள்ளது. இதுவரை 67 லட்சம் ஏக்கர் காடுகள் தீயில் கருகி சாம்பலாகியுள்ளன. அந்நாட்டின் 13 மாகாணங்களிலும் 213 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாகவும், 29 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கூபெக் நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு 10 ஆயிரம் பேர் உடனடியாக வீடுகளை … Read more

American Indian jailed for not bringing back son | மகனை திரும்ப அழைத்து வராத அமெரிக்க வாழ் இந்தியருக்கு சிறை

புதுடில்லி, குடும்ப நல நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல், தன் மகனை இந்தியா அழைத்து வராத அமெரிக்க வாழ் இந்தியருக்கு, ஆறு மாத சிறையும், 25 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜஸ்தானின் ஆஜ்மீரைச் சேர்ந்த தம்பதிக்கு, 2007ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இதற்கிடையே, இந்த தம்பதி விவாகரத்து கேட்டு ஆஜ்மீர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், 2022 மே மாதத்தில் இரு தரப்பினரும் … Read more

Anti-religion propaganda against Pak. Kill youth | மதத்துக்கு எதிராக துவேஷ பிரசாரம் பாக்.,கில் இளைஞருக்கு துாக்கு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் இஸ்லாமிய மதத்துக்கு எதிராக துவேஷ கருத்துகளை பரப்பிய கிறிஸ்துவ இளைஞருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் துாக்கு தண்டனை விதித்துள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இங்கு, இஸ்லாம் மதத்துக்கு எதிராக துவேஷ பிரசாரம் மேற்கொள்பவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இந்நிலையில், இங்கு லாகூரில் இருந்து 400 கி.மீ., துாரத்தில் உள்ள பஹ்வல்பூர் பகுதியைச் சேர்ந்த நவுமன் மாசிஹ் என்ற கிறிஸ்துவ இளைஞர் நான்கு ஆண்டுகளுக்கு முன், ‘வாட்ஸாப்’ செயலி … Read more

World leaders mourn… | உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல்…

ஒடிசாவில் நடந்த ரயில் விபத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். அவற்றின் விபரம்: இத்துயர சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவோர், விரைவில் நலம் பெற்று திரும்ப வேண்டும். விளாடிமிர் புடின், ரஷ்ய அதிபர் ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்து ஏற்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சீன அரசு மற்றும் மக்களின் சார்பில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விபத்தில் … Read more

Opposition parties demand resignation of railway minister | ரயில்வே அமைச்சர் ராஜினாமா செய்ய எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

புதுடில்லி, ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் பயணியர் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படாததால், அதற்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இந்த விபத்து குறித்து காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், “ரயில் விபத்து நாடு முழுதும் தேசிய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ”இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோரைக் கேட்க ஏராளமான கேள்விகள் இருந்தாலும், இப்போது மீட்புப் பணியும், … Read more