ஏலத்திற்கு வரும் சுருட்டு… ஆஹா! 80 ஆண்டுகளுக்கு முன்பு அவர் அடிச்சதா!

Winston Churchill Cigar: இரண்டு முறை பிரிட்டனின் பிரதமராக இருந்த சர்ச்சில் 80 ஆண்டுகளுக்கு முன் புகைத்த சுருட்டு ஒன்று தற்போது ஏலத்தில் விடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

North Korea spy satellite launch fails as rocket falls into the sea | வட கொரியா ஏவிய உளவு செயற்கை கோள் தோல்வியில் முடிந்தது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பியொங்யாங்: வடகொரியா நாட்டின் முதல் உளவு செயற்கை கோள் ஏவும் முயற்சி தோல்வியில் முடிந்ததாக, அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளது. வடகொரியா தனது முதல் உளவு செயற்கோள் ராக்கெட் முலமாக நாட்டின் வடமேற்கு பகுதியான டாங்சாங்-ரி பகுதியில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகளில் இந்த ராக்கெட் பல பிரச்சனைகளை சந்தித்து நடுவானில் வெடித்து கொரியாவின் மேற்கு கடல் பகுதியில் விழுந்தது. ராக்கெட் விண்ணில் … Read more

At Rahul Gandhis US event half the participants did not even stand up for national anthem, says BJP, releases video | ராகுல் பங்கேற்ற வெளிநாட்டு நிகழ்ச்சி: தேசிய கீதத்தை அவமதித்த பார்வையாளர்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: அமெரிக்கா சென்றுள்ள ராகுலுக்கு, அவரது ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், தேசிய கீதத்தை அவமதித்த பார்வையாளர்களுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது 10 நாள் பயணமாக அமெரிக்க செல்ல காங்., முன்னாள் எம்.பி., ராகுல் திட்டமிட்டிருந்தார். புதுடில்லி நீதிமன்றம் தடையில்லா சான்று அளித்ததை தொடர்ந்து, சமீபத்தில் ராகுலுக்கு, புதிய பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. இதையடுத்து ராகுல் நேற்று அமெரிக்கா சென்றார். அப்போது ராகுலுக்கு உற்சாக … Read more

இந்து சிறுமியை மதம்மாற்றி திருமணம் செய்த பாகிஸ்தானியர்

புதுடெல்லி: பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமியை கடத்திச் சென்று இஸ்லாம் மதத்துக்கு மாற்றி திருமணம் செய்த நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிகழ் வுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இம்மாத தொடக்கத்தில் பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமியை, அவளது வீட்டிலிருந்து 55 வயது மிக்க முஸ்லிம் நபர் ஒருவர் கடத்திச் சென்றார் என்றும், அவர் அந்தச் சிறுமியை கட்டாய மதமாற்றம் … Read more

நியூயார்க் நகர மக்களை வசீகரித்த சூரிய அஸ்தமனம்

நியூயார்க்: சூரிய உதயமும், அஸ்தமனங்கலும் ஓடிக்கொண்டிருக்கும் மனித வாழ்கையில் ஒரு கணம் அமைதிப்படுத்தக் கூடியவை. அந்த மன அமைதியைதான் நியூயார்க்கின் பகுதிவாசிகள் நேற்று கடத்திருக்கிறார்கள். நியூயார்க்கின் பரப்பரப்பான விதிகளில் ஒன்று மன்ஹாட்டன். வானளவு உயர்ந்த கட்டிடங்களால் உலக அளவில் பெயர் பெற்றது மன்ஹாட்டன். இதில் மன்ஹாட்டனின் முக்கிய வீதிகளில் நேற்று மாலை ஆயிரக்கணக்கான மக்கள் கூடி இயற்கையின் கண்கொள்ளா காட்சியை தங்களது கைபேசிகளில் பதிவு செய்திருக்கிறார்கள். காரணம்… மன்ஹாட்டனின் பிரமாண்ட உயர்ந்த கட்டிடங்களுக்கு மத்தியில் பிரமாண்ட சூரியன் … Read more

இராணுவ உளவு செயற்கைக்கோளை ஏவுவதற்கான முயற்சியில் தோல்வியடைந்த வடகொரியா

North Korea Latest Update: ஐநா தீர்மானங்களை மீறும் வடகொரியா மீது ஜப்பான் குற்றச்சாட்டு சுமத்தும் நிலையில், வட கொரிய உளவு செயற்கைக்கோளின் சந்தேகத்திற்குரிய பகுதியை கண்டுபிடித்துள்ளதாக தென் கொரிய இராணுவம் புதன்கிழமை (மே 31) தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது

சாட் ஜிபிடி உதவியுடன் தவறான தகவல்களை வழங்கியதால் அமெரிக்க நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் வழக்கறிஞர் ஸ்டீவன்

நியூயார்க்: சாட்ஜிபிடி கூறிய தகவல்களை ஆதாரமாக தாக்கல் செய்த அமெரிக்க வழக்கறிஞர் மன்னிப்பு கோரினார். அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்டோ மாடா என்பவர் நியூயார்க் செல்வதற்காக, ஏவியான்கா நிறுவன விமானத்தில் பயணம் செய்தார். அப்போது உணவு பொருட்களை கொண்டு வரும் டிராலி அவரது கால் மூட்டு பகுதியில் மோதியது. இதில் காயம் அடைந்த ராபர்டோ ஏவியான்கா விமான நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்யும்படி நீதிபதியிடம் ஏவியான்கா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு … Read more

Falling down and bowing to the scepter was Modis stunt: Rahul | செங்கோலை விழுந்து வணங்கியது மோடி செய்த ஸ்டண்ட்: ராகுல்

சான் பிரான்சிஸ்கோ: பார்லிமென்டில், செங்கோலை விழுந்து வணங்கியது மோடி செய்த ஸ்டண்ட் எனக்கூறியுள்ள காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ராகுல், உண்மையான பிரச்னைகளில் இருந்து திசைதிருப்பவே செங்கோல் விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர் எனக்கூறியுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ராகுல் ஸ்டான்போர்டு பல்கலையில் இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார். அதிகரிப்பு அப்போது ராகுல் பேசியதாவது: மக்களை அச்சுறுத்தி வரும் பா.ஜ., விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறது. மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டிய அனைத்து அமைப்புகளையும் பா.ஜ.,வும் ஆர்எஸ்எஸ்., அமைப்பும் … Read more

இந்திய மல்யுத்த வீராங்கனைகள் கையாளப்பட்ட விதத்திற்கு ஐக்கிய உலக மல்யுத்த அமைப்பு கண்டனம்

லோசான்: இந்திய மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் கையாளப்பட்டு வரும் விதத்திற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது ஐக்கிய உலக மல்யுத்த அமைப்பு (UWW). அறவழியில் நீதிகேட்டு போராடி வரும் மல்யுத்த வீரர்கள் நடத்தப்படும் விதம் கவலை அளிக்கும் வகையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரான பிரிஜ் பூஷண் சரண் சிங், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக இந்திய மல்யுத்த வீராங்கனைகள் குற்றச்சாட்டு வைத்தனர். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த மாதம் முதல் … Read more

மும்பை தாக்குதலில் தொடர்புள்ள லஷ்கர் தீவிரவாதி பாக். சிறையில் உயிரிழப்பு

புதுடெல்லி: மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 160 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு தீவிரவாதி களை தயார்படுத்திய லஷ்கர்-அமைப்பின் தலைவர்களில் முக்கியமானவர் ஹபிஸ் அப்துல் சலாம் புட்டாவி. இவர் லஷ்கர் அமைப்புக்கு நிதி திரட்டுவது, ஆட்களை தேர்வு செய்வது போன்ற பணிகளை 20 ஆண்டுகளாக செய்து வந்தார் என அமெரிக்க உளவுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2002-ம் ஆண்டு மத்தியில் பாகிஸ்தானின் லாகூரில் உள்ள லஷ்கர் மையத்தின் பொறுப்பாளராக இவர் … Read more