புதிய சட்டத்தால் தென் கொரியாவில் அனைவருக்கும் வயது குறைந்தது: சுவாரஸ்யப் பின்னணி
சியோல்: தென் கொரியா இயற்றியுள்ள புதிய சட்டத்தினால் வயதை கணக்கிடும் பாரம்பரிய முறைகள் கைவிடப்பட்டு சர்வதேச நடைமுறை அமலுக்கு வருகிறது. இந்த அறிவிப்பு தென் கொரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தென் கொரியாவில் வயதின் கணக்கீடு என்பது பிற நாடுகளிலிருந்து வேறுபடுகிறது. அவர்கள் வயதை கணக்கிட 2 முறையை பின்பற்றுகிறார்கள். அதாவது ஓர் குழந்தை பிறக்கும் போதே அது ஒரு வயதுடன் பிறப்பதாக அவர்கள் நிர்ணயிக்கின்றனர். அதாவது தாயின் கர்ப்பப் பையில் இருக்கும்போதே குழந்தையின் வயது எண்ணிக்கை தொடங்குகிறது. … Read more