"இந்து அல்லாதோர் வீட்டுக்குச் சென்றால் பெண்களின் காலை உடையுங்கள்" – பாஜக Ex. MP பேச்சால் சர்ச்சை

மத்திய பிரதேசம் மாநிலத்தின், முன்னாள் போபால் நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா சிங் தாக்கூர் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன. அவர் பெற்றோர்கள், தங்கள் மகள்கள் இந்து அல்லாதோர் வீடுகளுக்குச் செல்வதைத் தடுக்க வேண்டும் என்றும் மீறினால் அவர்களின் காலை உடைக்க வேண்டுமென்றும் பேசியிருக்கிறார். இந்த மாத தொடக்கத்தில் போபாலில் ஆன்மிக நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட பிரக்யா, பெற்றோர்களின் விருப்பத்துக்கு மாறாக நடக்கும் பிள்ளைகளுக்கு ‘உடல்ரீதியான’ தண்டனைகளை வழங்க வேண்டும் எனக் கூறினார். Pragya singh Thakur “உங்கள் … Read more

தீபாவளி பண்டிகை: சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு

சென்னை: தீபாவளி பண்டிகையொட்டி, பொதுமக்கள் வெடித்த வெடிகளால்,  சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. அதேவேளையில் கடந்த ஆண்டை விட குறைவு என்றம் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி காற்று மாசு 154 ஆக சராசரியாக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் நேற்று (அக். 20ந்தேதி) தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதுபோல தமிழகத்திலும்  இந்த ஆண்டு வழக்கமானதை விட  மிகவும் உற்சாகத்துடன் தீபாவளியை மக்கள் கொண்டாடினர்.  சென்னை உள்பட … Read more

குன்னூர்: சாலையில் வழிந்தோடும் காளான் கழிவுநீர்; நோய்த்தொற்று அபாயத்தில் கூலி தொழிலாளர்கள்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள அதிகரட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது கோலணி மட்டம் பகுதி. நூற்றுக்கணக்கான விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வசிக்கும் இந்தப் பகுதியில் முறையான சாலை, நடைபாதை, பொதுக்கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். சாலையில் வழிந்தோடும் காளான் கழிவுநீர் மேலும், இந்தப் பகுதிகளில் விளைவிக்கப்படும் மலை காய்கறிகளுக்கு அளவிற்கு அதிகமான ரசாயனங்களைப் பயன்படுத்தப்படுவதால், சுவாசப் பிரச்னைகள், சரும பாதிப்புகள், தைராய்டு சுரப்பி பிரச்னை உள்ளிட்ட பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு … Read more

பருவமழை காலம்: அறுந்து கிடக்கும் மின்கம்பிகள் குறித்து மின்வாரியம் எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அறுந்து கிடக்கும் மின்கம்பிகள் குறித்து பொதுமக்களுக்கு மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது. மழைக்காலங்களில் மின்வாரியம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மின்கம்பங்கள், மின்மாற்றிகள், மின் பகிர்வுப் பெட்டிகள் மற்றும் மின் இணைப்புகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். மின்கம்பிகள் அறுந்து கிடந்தால், அதைத் தொடாமல் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும். குழந்தைகள் மின்கம்பங்களுக்கு அருகில் விளையாடுவதைத் தடுக்க வேண்டும் என கூறி … Read more

கர்நாடகா: முதல்-மந்திரி சித்தராமையா பங்கேற்ற நிகழ்ச்சியில் 13 பேர் மயக்கம்

பெங்களூரு, கர்நாடகாவின் தட்சண கன்னடாவில் புட்டூர் பகுதியில் அசோகா ஜனமன 2025 என்ற பெயரிலான நிகழ்ச்சி ஒன்று நடந்தது. புட்டூர் எம்.எல்.ஏ. அசோக் குமார் ராய் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டது. இதனால், அவரை காண திரளான மக்கள் கூடினர். இந்நிகழ்ச்சி மதியம் 12 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் மதியம் 1 மணி அளவில் நிகழ்ச்சி நடந்த மேடைக்கு வந்துள்ளார். பிற்பகல் 3 மணிக்கு … Read more

கான்ஸ்டபிளை குத்திக்கொன்ற ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை

ஐதராபாத், தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத் பகுதியை சேர்ந்த ரவுடி ஷேக் ரியாஸ் (வயது 24). இவரை வழக்கு ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நிசாமாபாத் போலீஸ் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஷேக் ரியாசை கான்ஸ்டபிள் பிரமோத் தனது பைக்கில் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார் . அப்போது தான் வைத்திருந்த கத்தியால் கான்ஸ்டபிள் பிரமோத்தை சரமாரியாக குத்திவிட்டு ரியாஸ் தப்பிச்சென்றார். தடுக்க முயன்ற சப் – இன்ஸ்பெக்டர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார். ரவுடி … Read more

பீகார் தேர்தலில் இருந்து பின்வாங்கிய ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா

பாட்னா, 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 11ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 14ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஐக்கிய ஜனதா தளம், பாஜக இடையேயான ஆளும் கூட்டணியில் … Read more

ஜனாதிபதியை நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

புதுடெல்லி, தீபாவளி பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் அமாவாசை திதியில் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிகாலை முதலே தீபாவளி களைகட்டி வருகிறது. பெரும்பாலான மக்கள் காலையில் எழுந்து நீராடிவிட்டு பூஜைகள் செய்து, புத்தாடை அணிந்து குடும்பத்தினருடன் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். கோவில்களுக்கு சென்றும் பலர் வழிபாடு செய்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து … Read more