டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கை என்ஐஏ வசம் ஒப்படைத்தது மத்திய உள்துறை அமைச்சகம்
புதுடெல்லி: டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ வசம் மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக, சட்டவிரோத தடுப்புச் சட்டம் பிரிவு 16 மற்றும் 18, குண்டு வெடிப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள், பாரதிய நியாய சன்ஹிதா ஆகிய சட்டங்களின் கீழ் டெல்லி கோட்வாலி காவல் துறையினர் வழக்குப் பதிவு … Read more