பி.சி.க்கு 42 சதவீத இடஒதுக்கீடு கேட்டு தெலங்கானாவில் பந்த்
ஹைதராபாத்: பிற்படுத்தப்பட்டோருக்கு 42 சதவீத இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி தெலங்கானாவில் ஆளும் காங்கிரஸ், பாஜக, பிஆர்எஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் அனைத்து இயக்கங்கள் சார்பில் நேற்று பந்த் நடத்தப்பட்டது. இதனால் அரசு, தனியார் பேருந்துகள் இயக்கப்பட வில்லை. இதன் காரணமாக தீபாவளி பண்டிகை மற்றும் வார இறுதியை கொண்டாட வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்லவிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போராட்டத்தை அறியாமல் பேருந்து நிலையங்களில் காத்து கிடந்தனர். Source link