வரலாற்று சாதனை படைத்த நியூசிலாந்து! 37 வருடங்களுக்குப் பிறகு வெற்றி!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒரு நாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்திய மண்ணில் 37 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தாலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடி இந்த தொடரை கைப்பற்றியுள்ளனர். … Read more