அணியில் 4 ஸ்பின்னர்கள் எதற்கு..? இந்திய முன்னாள் வீரர் கேள்வி
சென்னை, கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அணி 124 ரன் இலக்கை எட்ட முடியாமல் 93 ரன்னில் சுருண்டு தோல்வி அடைந்தது. இந்த டெஸ்டில் எந்த அணியும் 200 ரன்களை தாண்டவில்லை. நான்கு இன்னிங்சிலும் பவுமா மட்டுமே அரைசதம் அடித்தார். ஆடுகளத்தில் பவுன்சுடன், பந்து தாறுமாறாக சுழன்று திரும்பியதால் துல்லியமாக கணிக்க முடியாமல் பேட்ஸ்மேன்கள் தகிடுதத்தம் போட்டனர். இதனால் ஆடுகளம் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இருப்பினும் இந்திய அணியின் … Read more