நவ.12-ல் டெல்டா உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் வரும் நவ.12-ம் தேதி டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளையும் (நவ.9), நாளை மறுதினமும் … Read more

சமீபத்தில் வீடு மாற்றியவரா நீங்கள்? வாக்காளர் பட்டியலில் என்ன செய்ய வேண்டும்?

அனைத்து குடிமக்களும் SIR வாய்ப்பை பயன்படுத்தி, தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றுவதற்கு தயாராகுமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

கரூர் துயரம்: தவெக பிரச்சார வாகன சிசிடிவி பதிவு, ஆவணங்கள் சிபிஐ-யிடம் ஒப்படைப்பு

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் கூட்ட உயிரிழப்பு தொடர்பாக தவெக பிரச்சார வாகன சிசிடிவி கேமரா பதிவு கேட்டு சிபிஐ சம்மன் வழங்கிய நிலையில், கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐயிடம் வீடியோ, ஆவணங்களை ஒப்படைக்க தவெக வழக்கறிஞர் மற்றும் நிர்வாகிகள் ஆஜராகினர். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிஐ இதுதொடர்பாக 300க்கும் மேற்பட்டவர்களுக்கு … Read more

தமிழக ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.70 லட்சம் அபராதம் – கேரளாவில் நடப்பது என்ன?

Tamil Nadu Omni Bus: தமிழக ஆம்னி பேருந்துகளுக்கு கேரளாவில் லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப்படுவதாக பிரச்னை எழுந்துள்ள நிலையில், இவ்விவகாரம் குறித்து இங்கு விரிவாக காணலாம். 

“தேர்தல் ஆணையம் மூலமாக குறுக்கு வழியில் திமுகவை வீழ்த்த முயற்சி” – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “கொள்கை ரீதியாக திமுகவை வீழ்த்த முடியாததால், தேர்தல் ஆணையம் மூலமாக, குறுக்கு வழியில் வீழ்த்த முடியுமா என்று முயற்சி செய்கிறார்கள், அதுதான், சார் (SIR)” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இளைஞரணி சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் “திமுக 75 – அறிவுத்திருவிழா” நிகழ்வைத் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து “காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திமுக 75” நூலை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசும்போது, “ திமுகவின் 75 ஆண்டுகள் … Read more

தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம் என்ன? விஜய் லாக் செய்த 5 ஆப்சன்! என்ன என்ன தெரியுமா?

கரூர் சோக நிகழ்விற்கு பிறகு, சற்று தொய்வடைந்திருந்த தவெக-வின் தேர்தல் பணிகள், தற்போது மீண்டும் வேகம் எடுத்துள்ளன. அடுத்தடுத்த பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

எஸ்ஐஆர் பற்றி விவாதம்: ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

சென்னை: ஸ்டாலின் தலைமையில் நாளை (நவ. 9) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும். மாவட்டச் செயலாளர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் … Read more

தீவிரமடையும் SIR பணிகள்! வீடு பூட்டியிருந்தால் என்னவாகும்? – முழு விவரம்!

வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் மற்றும் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

பொய்யான தகவல்களைக் கூறி முதல்வர் ஸ்டாலினை விமர்சிப்பதா? – அன்புமணி, ஆதவ் அர்ஜுனாவுக்கு காசிமுத்து மாணிக்கம் கண்டனம்

சென்னை: திமுக வர்த்தக அணி செய​லா​ளர் காசி​முத்து மாணிக்​கம் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: மேம்​பால வழக்​கில் பெங்​களூரு​வில் இருந்து நேராக நீதிபதி அசோக்​கு​மார் வீட்​டுக்கே காலை 11 மணிக்கு சென்று சரண்​டர் ஆனார் தற்போதைய முதல்​வர் மு.க.ஸ்​டா​லின். பின்​னர் சிறைக்​குச் சென்​று, விடு​தலை​யும் ஆனார். அந்த வழக்கு என்ன ஆனது? 2011 முதல் 2021 வரை அதி​முக​வினர் என்ன செய்​தார்​கள்? சிறை என்​றவுடன் ஓடிப்​போனவர் இல்லை ஸ்டா​லின். சிறை என்​றதும் ஓடோடி வந்​தவர் அவர். கரூரில் உங்​கள் … Read more

‘பெண்கள் பாதுகாப்பு குறித்த எடப்பாடியின் அற்பத்தனம் அம்பலமானது’ – ஆர்.எஸ்.பாரதி

சென்னை: “தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என பழனிசாமி விஷமப் பிரச்சாரம் செய்ததற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும். இபிஎஸ் வழியில் அன்புமணி ராமதாஸ், நயினார் நாகேந்திரன் போன்றவர்களும் உண்மை அறியாமல் தங்களது அரசியல் சுயலாபத்திற்காகப் பெண்களின் பாதுகாப்பை அரசியல் பகடைக்காயாக உருட்டிக் கொண்டிருப்பதை அற்பத்தனமான அறிக்கைகள் அம்பலப்படுத்தி இருக்கின்றன.” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்கிற செய்தி எப்படியாவது செவியில் … Read more