முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை மாணவர் திருவிழாவாக கொண்டாட பாஜக வலியுறுத்தல்
சென்னை: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்தநாள் விழாவான தேவர் ஜெயந்தியை பள்ளி, கல்லூரிகளில் மாணவர் திருவிழாவாகக் கொண்டாட வேண்டும் என தமிழக அரசை பாஜக வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கை: `தேசியம் என் உடல், தெய்வீகம் என் உயிர்’ என்ற உயர்ந்த சிந்தனையுடன் தேச ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், தனி மனித ஒழுக்கத்துக்கும் இலக்கணமாக வாழ்ந்து மறைந்த, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை மாணவர்களிடம் கொண்டு செல்ல வேண்டும். தமிழக மாணவ சமுதாயம் … Read more