நவ.5-ல் தவெக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்: விஜய் அறிவிப்பு
சென்னை: நவம்பர் 5 ஆம் தேதி தவெக சிறப்பு பொதுக்குழு நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “நம் அரசியல் பயணத்தில் அர்த்தம் பொதிந்த ஓர் ஆழ்நீள் அடரமைதிக்குப் பிறகு உங்களோடு பேசவும் உங்களை அழைக்கவுமான ஒரு கடிதம் இது. சூழ்ச்சியாளர்கள், சூதுமதியாளர்கள் ‘துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்’ அச்சமின்றி அத்தனையையும் உடைத்தெறிந்துவிட்டு, நம் அன்னைத் தமிழ்நாட்டு மக்களுக்காக ஆர்த்தெழ வேண்டிய தருணம் இது. … Read more