ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு

காபூல், ஆப்கானிஸ்தானில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 8.48 மணியளவில் ரிக்டர் அளவில் 4.2 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 36.65 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 69.54 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. EQ of M: 4.2, … Read more

வெனிசுலாவில் அரசியல் கைதிகள் விடுவிப்பு நடவடிக்கை மந்தம்

கரகாஸ், 2024-ம் ஆண்டு வெனிசுலாவில் பொதுத்தேர்தலில் முறைகேடு நடந்ததாகக்கூறி அரசியல் எதிர்க்கட்சியினர், பத்திரிகையாளர்கள், மனித உரிமை வக்கீல்கள், முன்னாள் ராணுவத்தினர் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் கடந்த 3-ந்தேதி அமெரிக்கா ராணுவத்தினர் கரகாசுக்குள் ஊடுருவி அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்து நாடு கடத்தி நியூயார்க் சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து அந்த நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக போராடிய அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என … Read more

உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

கீவ், ரஷியா மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போரானது 4-ம் ஆண்டை நெருங்கி உள்ளது. நேட்டோவில் சேரும் முடிவை உக்ரைன் கைவிட கோரியும், ராணுவ நடவடிக்கை என்ற பெயரிலும் ரஷியா போரில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. ரஷியாவுக்கு, நட்பு நாடான வடகொரியா, ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்கிறது என கூறப்படுகிறது. போரால் பெண்கள், குழந்தைகள் … Read more

ஈரானை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுங்கள்: டிரம்புக்கு முன்னாள் இளவரசர் வேண்டுகோள்

பாரீஸ் ஈரான் நாட்டில் அதிகரித்துள்ள பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் விரக்தி அடைந்துள்ள மக்கள் அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந்தேதி தொடங்கிய மக்களின் போராட்டம், 16-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. ஈரானின் 31 மாகாணங்களில் 100 நகரங்களில் போராட்டம் பரவியுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்க பாதுகாப்பு படையினரை அரசு இறக்கி விட்டு உள்ளது. இதன்படி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு … Read more

லெபனானில் ஹிஸ்புல்லா ஆயுத கிடங்கு மீது இஸ்ரேல் தாக்குதல்

ஜெருசலேம், காசாவுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலை தாக்கி வருகின்றனர். இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இதன்படி, லெபனானின் தெற்கே சமீப மாதங்களாக ஹிஸ்புல்லா உறுப்பினர்களின் செயல்பாடுகள் கண்டறியப்பட்டு அவர்களின் தளங்கள் மீது இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தி அழித்துள்ளனர். இதுபற்றி இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டு உள்ள செய்தியில், தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் பல்வேறு ராணுவ தளங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. சமீப … Read more

இந்தியாவை தாக்க 1000+ தற்கொலை படையினர்… உலகமே நடுங்கும் – பாகிஸ்தான் பயங்கரவாதி பகீர்

Masood Azhar: பாகிஸ்தான் பயங்கரவாத தலைவர் மசூத் அசார், இந்தியாவை தாக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை படையினர் தயாராக இருப்பதாக ஆடியோ ஒன்றில் பேசியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

மீண்டும் இந்தியா மீது தாக்குதலா…? அம்பலமான பாகிஸ்தானின் பிளான்!

Geopolitics: காசா மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கு என கூறி பெரும் நிதி திரட்டலில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதி நிலைகளை குறி வைத்து அமெரிக்கா கடுமையான தாக்குதல்

நியூயார்க், சிரியாவில் 2024-ம் ஆண்டில், முன்னாள் ஜனாதிபதி ஆசாத் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், நடந்து வரும் அரசானது, அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், பல்மைரா நகரில் கடந்த மாதம் நடந்த தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 2 பேர் மற்றும் அமெரிக்க குடிமகன் ஒருவர் என 3 பேர் பலியானார்கள். இந்த நிலையில், இதற்கு பதிலடி தரும் வகையில் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதி நிலைகளை … Read more

கடவுளுக்கு எதிராக போர் செய்கிறீர்கள்; போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஈரான்

தெஹ்ரான், ஈரான் நாட்டின் தலைவராக அயோதுல்லா அலி காமேனி இருந்து வருகிறார். அந்நாட்டில் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வருகிறது. அதிகரித்து வரும் பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை ஆகியவற்றால் மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால், அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது. மாகாணங்கள், நகரங்கள் என பல்வேறு பகுதிகளிலும் மக்கள் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 13 நாட்களாக இந்த ஆர்ப்பாட்டம் நீடிக்கிறது. … Read more

வெனிசுலா அதிபரை போல புதினை கடத்த திட்டமா? அமெரிக்க அதிபர் டிரம்ப் பதில்

வாஷிங்டன், உக்ரைன்-ரஷியா இடையே போர் தொடங்கி 4 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்து வரும் அமைதி ஒப்பந்தங்களை ஏதேதோ காரணங்கள் கூறி ரஷிய அதிபர் புதின் நிராகரித்து வருகிறார். இதனால் போர் நிறுத்தம் தொடர்பாக தொடர்ந்து இழுபறி ஏற்பட்டு வருகிறது. அண்மையில், வெனிசுலா நாட்டிற்குள் அமெரிக்கா ராணுவத்துறையினர் அதிரடியாக நுழைந்து அந்த நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவை மனைவியுடன் … Read more