பெற்றெடுத்த தந்தையே..3 குழந்தைகளை அனாதை இல்லத்தில் விட்ட சோகம்! வைரல் செய்தி..

Father Leaves His Children In Orphanage : தான் பெற்றெடுத்த மூன்று குழந்தைகளை, ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் ஒரு தந்தை விட்டிருக்கும் செய்தி, இணையவாசிகளின் மனங்களை கனக்க செய்துள்ளது.

நெப்போலியன் காலத்து நகைகள் கொள்ளை: பிரான்ஸ் நாட்டின் அருங்காட்சியகம் மூடல்

பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள இலூவா அருங்​காட்​சி​யகம். இங்கு மோனோலிசா ஓவி​யம் உட்பட வரலாற்று சிறப்புமிக்க 33,000 கலைப் பொருட்​கள், சிற்​பங்​கள், நகைகள், ஓவி​யங்​கள் காட்​சிக்கு வைக்​கப்​பட்​டுள்​ளன. இங்​குள்ள கலைப் பொருட்​கள் மற்​றும் விலைம​திப்​பற்ற பொருட்​கள் பல முறை திருடு​போ​யுள்​ளன. கொள்ளை முயற்சி சம்​பவங்​களும் நடை​பெற்​றுள்​ளன. இந்​நிலை​யில் இந்த அருங்​காட்​சி​யகத்​தில் நேற்று முன்​தினம் ஒரு கொள்ளை சம்​பவம் நடை​பெற்​றுள்​ளது. ஸ்கூட்​டரில் வந்த கொள்​ளை​யர்​கள் அருங்​காட்​சி​யகத்​தில் கட்​டிட பராமரிப்பு நடை​பெற்ற இடத்​தின் வழி​யாக ஊடுரு​வி​யுள்​ளனர். ஹைட்​ராலிக் ஏணியை … Read more

கரீபியன் கடலில் போதைப் பொருட்கள் கடத்தி வந்த நீர்மூழ்கி கப்பலை அழித்தது அமெரிக்கா

வாஷிங்டன்: லத்​தீன் அமெரிக்க நாடு​களில் இருந்து கரீபியன் கடல் வழி​யாக அமெரிக்கா​வுக்கு அதி​விரைவு படகு​கள் மூலம் போதைப் பொருட்​கள் கடத்​தல் நடை​பெற்று வந்​தது. கடந்த 2 மாதங்​களாக போதைப் பொருட்​களை கடத்​திவந்த 6 அதி விரைவு படகு​களை அமெரிக்க படைகள் கரீபியன் கடலில் சுட்டு வீழ்த்​தின. இந்த படகு​கள் வெனிசுலா​வில் இருந்து வந்​திருக்​கலாம் என நம்​பப்​படு​கிறது. இந்​நிலை​யில் கரீபியன் கடல் பகு​தி​யில் இரவு நேரத்​தில் ஒரு நீர்​மூழ்கி கப்​பல், பாதி​யளவு தண்​ணீரில் மூழ்​கியபடி வேக​மாக சென்​றுள்​ளது. அதில் … Read more

எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த வடகொரிய ராணுவ வீரரை கைது செய்த தென்கொரியா

சியோல், கொரிய தீபகற்பத்தில் வடகொரியா, தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா, ஜப்பான், அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதனிடையே, வடகொரியா – தென்கொரியா எல்லையில் இருநாட்டு ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உலகிலேயே மிகுந்த பதற்றம் நிறைந்த ராணுவ எல்லையாக இப்பகுதி பார்க்கப்படுகிறது. ஆனாலும், பொருளாதார காரணங்கள், வறுமை, அடக்குமுறை உள்பட பல்வேறு … Read more

இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்

தெஹ்ரான், இஸ்ரேல், ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே கடந்த ஜுன் மாதம் மோதல் மூண்டது. 12 நாட்கள் நடந்த இந்த மோதலில் இரு தரப்பிலும் பலர் உயிரிழந்தனர். இதனிடையே, இந்த மோதலுக்குப்பின் இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக தங்கள் நாட்டை சேர்ந்த பலரையும் ஈரான் கைது செய்து வருகிறது. கைது செய்யப்படும் நபர்களுக்கு உடனடியாக மரண தண்டனை நிறைவேற்றி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக ஒருவருக்கு ஈரான் … Read more

பிலிப்பைன்சில் கனமழை, வெள்ளம்: 5 பேர் பலி

மணிலா, தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டில் பல்வேறு தீவுகள் உள்ளன. இந்நிலையில், பிலிப்பைன்சை பெங்சன் என்ற புயல் தாக்கியது. புயல் காரணமாக அந்நாட்டின் லுசன், மிண்டனோ ஆகிய தீவுகள், கியூசன் மாகாணம், பிடகோ நகரம் போன்ற பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. மேலும், பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்நிலையில், அந்நாட்டை தாக்கிய புயல் காரணமாக பெய்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 பேர் மாயமாகினர். பல்வேறு … Read more

முடிவுக்கு வரும் போர் நிறுத்தம்? ; இஸ்ரேல் – ஹமாஸ் மோதல்

ஜெருசலேம், காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை … Read more

பிரான்ஸ்: அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த நெப்போலியனின் வைர நகைகள் கொள்ளை

பாரிஸ், பிரான்ஸ் நாட்டின் மன்னராக திகழ்ந்தவர் நெப்போலியன். இவர் பல்வேறு நாடுகளை படையெடுத்து தனது ஆட்சியை விரிவுபடுத்தினார். இதனிடையே, நெப்போலியன் பயன்படுத்திய 9 வைர நகைகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள லவ்ரி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்த நகைகள் உள்பட பல்வேறு கலை பொருட்களை பார்க்க தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த அருங்காட்சியகத்திற்கு வருகை தருகின்றனர். இந்நிலையில், அருங்காட்சியகத்தில் இருந்த நெப்போலியனின் வைர நகைகள் இன்று கொள்ளையடிக்கப்பட்டன. அருங்காட்சியகத்தில் இன்று வழக்கம்போல சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பொருட்களை … Read more

24 வயது பெண்ணுடன் 74 வயது நபர் திருமணம்… பெண் வீட்டாருக்கு ரூ.2 கோடி – கடைசியில் ட்விஸ்ட்

Bizarre Marriage News: 24 வயது பெண்ணை திருமணம் செய்தது மட்டுமின்றி, பெண் வீட்டாருக்கு ரூ.2 கோடி பரிசுத்தொகையும் கொடுத்த 74 வயதான நபர்… இந்த சுவாரஸ்ய திருமண நிகழ்வு குறித்து இங்கு காணலாம்.

பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன: கத்தார் அறிவிப்பு

தோஹா: பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே ஒரு வாரத்துக்கும் மேலாக நடந்த சண்டையில் பலர் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இதனையடுத்து ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் பிரதிநிதிகள் தோஹாவில் தங்களுக்கு இடையேயான மோதலை தீர்க்க பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் கத்தார் மற்றும் துருக்கி நாடுகள் மத்தியஸ்தர்களாக செயல்பட்டனர். இதனை தொடர்ந்து, ‘பேச்சுவார்த்தையின் போது, ​​இரு தரப்பினரும் உடனடி போர்நிறுத்தத்துக்கும், இரு நாடுகளுக்கும் இடையே நீடித்த அமைதி … Read more