கடைகளில் விற்பனைக்கு வந்த JioPhone Next மொபைல் – விலை ரொம்ப கம்மி!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி, நாட்டிலேயே மலிவான 4ஜி போனை அறிமுகம் செய்தது. கூகுள் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் படி, இந்த மலிவு விலை
JioPhone Next
ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டது.

மின்னணு வர்த்தக நிறுவனங்கள் வாயிலாக மட்டுமே விற்கப்பட்டு வந்த இந்த
ஜியோபோன் நெக்ஸ்ட்
, தற்போது வாடிக்கையாளர்களின் வசதிக்காக, அருகிலுள்ள ஜியோ கடைகளில் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஜியோபோன் நெக்ஸ்ட் தான் உலகிலேயே மிகவும் விலை குறைந்த 4ஜி ஸ்மார்ட்போன் என்று ஜியோ நிறுவனம், இந்த மொபைல் வெளியீட்டன்று சூளுரைத்தது. அதற்கு ஏற்றார்போல, புதிய 4ஜி ஜியோ போனை பல அம்சங்களுடன் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

ஒரு வருடம் செல்லுபடியாகும் Jio Recharge திட்டங்கள்! ஓடிடி சந்தா இலவசம்!

ஜியோபோன் நெக்ஸ்ட் விலை

இந்தியாவில் ஜியோபோன் நெக்ஸ்ட் 4ஜி ஸ்மார்ட்போன் ரூ.6,499 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து விலைக் குறைவான 4ஜி ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் இது இடம்பெற்றது. வாடிக்கையாளர்கள் ஜியோ இணையதளத்தில் பதிவு செய்யாமல் இந்த ஸ்மார்ட்போனை வாங்க வசதி செய்யப்பட்டிருந்தது.

மேற்கூறிய படி, தற்போது சில்லறை விற்பனை நிலையங்களில் கொண்டு வரப்பட்டிருக்கும் இந்த ஜியோ 4ஜி ஸ்மார்ட்போன், மின்னணு வணிக தளங்களில் பட்டியலிடப்பட்ட அதே விலையில் கிடைக்கும் என்று நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் உறுதிப்படுத்தியுள்ளது.

ஜியோபோன் நெக்ஸ்ட் சிறப்பம்சங்கள்

இந்த ஸ்மார்ட்போனில் 5.45″ அங்குல அளவுள்ள எச்டி எல்சிடி டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளேயை கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாக்கிறது. குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் QM 215 புராசஸர் இந்த ஸ்மார்ட்போனை இயக்குகிறது.

மேலும், இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மெமரி வழங்கப்பட்டுள்ளது. கோப்புகளை சேமிக்க 32ஜிபி உள்ளடக்க ஸ்டோரேஜ் மெமரியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, எஸ்டி கார்ட் ஸ்லாட் உதவியுடன் மெமரியை 512ஜிபியாக மெமரி கார்டை பயன்படுத்தி நீட்டித்துக் கொள்ள முடியும்.

JioBook Laptop: லேப்டாப் பிராண்டுகள் ஷாக்… சந்தையில் கால்பதிக்கும் ஜியோ!

இந்த ஸ்மார்ட்போனில் ஜியோ மற்றும் கூகுளின் பிரத்தியேக செயலிகள் பிரீ லோடடாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட ‘பிரகதி ஓஎஸ்’ (Pragathi OS) ஸ்கின் மூலம் இயக்கப்படுகிறது. இரட்டை 4ஜி சிம் ஆதரவு ஜியோபோன் நெக்ஸ்ட் 4ஜி போனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஜியோபோன் நெக்ஸ்ட் கேமரா

குறைந்த விலை என்றாலும், தேவையான சில வேலைகளை மேற்கொள்ள இந்த ஸ்மார்ட்போனில் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. பின்புறம் 13 மெகாபிக்சல் கேமரா இந்த போனில் பொருத்தப்பட்டுள்ளது. செல்பி, வீடியோ அழைப்புகளுக்ளுக்கென 8 மெகாபிக்சல் கேமராவை முன்புறத்தில் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனிற்கு நிரந்தர ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கப்படும் என Jio நிறுவனம் உறுதியளித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 3500mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. ப்ளூடூத், வைஃபை, ஹாட்ஸ்பாட், ஓடிஜி, எஃப்.எம், 3.5mm ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

Jio Phone 5g: மிகக் குறைந்த விலையில் ஜியோ 5ஜி போன்… ஜியோவின் கனவு நனவாகுமா!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.