நடிகர் சோனு சூட்டின் தங்கை 20ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி

பஞ்சாப் மாநிலத்தின் மோகா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நடிகர் சோனு சூட்டின் தங்கை மாள்விகா சூட் சுமார் 20ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

கொரோனா காலத்தில் மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்ததின் மூலம் பிரபலமான நடிகர் சோனு சூட்டின் தங்கை மாள்விகா சூட் கடந்த ஜனவரி மாதம் காங்கிரசில் சேர்ந்த நிலையில், அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.

மோகா தொகுதியில் போட்டியிட்ட அவர், 38125 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். அந்த தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அமன்தீப் கவுர் 58ஆயிரத்து813 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.