உக்ரைனில் சிக்கிய தமிழக மாணவர்கள் முழுமையாக மீட்கப்பட்டதாக திருச்சி சிவா தவல்…

சென்னை: உக்ரைனில் சிக்கிய தமிழக மாணவர்கள் முழுமையாக மீட்கப்பட்டு விட்டதாக திமுக எம்பி திருச்சி சிவா தவவல் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா உக்ரைன் இடையே தொடர்ந்து போர் தொடர்ந்து வருவதால், அங்கு மருத்துவம் உள்படி உயர்படிப்புபடிக்க சென்ற தமிழக மீனவர்கள் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, மத்திய அரசு உதவியுடன் தமிழகஅரசும் சிறப்பு குழு அமைத்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வந்தது. இதையடுத்துஆபரேசன் கங்கா மூலம் சிறப்பு விமானங்களை அனுப்பி உக்ரைனில் சிக்கிய தமிழக மாணவர்கள் அண்டை நாடுகளின் எல்லைக்கு வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வந்தன.

இதையடுதது, நேற்று  உக்ரைனின் சுமி நகரில் சிக்கித்தவித்த தமிழ்நாட்டை சேர்ந்த 53 மாணவர்கள் விமானம் மூலம் டெல்லி வந்தனர். அவர்களை தமிழக மீட்பு குழுவினர் திருச்சி சிவா தலைமையில் விமான நிலையத்தில் வரவேற்றனர். பின்னர் அவர்களுக்கு  உணவு வழங்கப்பட்டு, சென்னை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த திருச்சி சிவா, நாடு திரும்ப விருப்பம் தெரிவித்து தமிழ்நாடு அரசிடம் விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

உக்ரைனில் தங்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 34 மாணவர்கள் நாடு திரும்ப விருப்பம் இல்லை என தெரிவித்து விட்டார்கள் என்றும் திருச்சி சிவா குறிப்பிட்டார்.

இந்த நிலையில், உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில் இயங்கிவரும் நேஷனல் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தில் பயின்றுவரும் மாணவர்களுக்கு வரும் 21-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாகவும், அதன்பின்னர் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  உக்ரைனில் உள்ள சில கல்வி நிறுவனங்கள் வரும் 14-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளன. இதனால் நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.