"பழிவாங்குறதுனா என்னன்னு தெரியுமா?"..மிரட்டும் சாணிக்காயிதம் டீசர் – ரிலீஸ் தேதி அறிவிப்பு

கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சாணிக்காயிதம்’ படம், அமேசான் ஓடிடியில், வருகிற 6-ம் தேதி வெளியாக உள்ளது.

வசந்த் ரவி நடிப்பில், கடந்த ஆண்டு வெளியான ‘ராக்கி’ படத்தைத் தொடர்ந்து, அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள படம் ‘சாணிக்காயிதம்’. இந்தப் படத்தில், கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பழிவாங்கும் கதையம்சம் கொண்ட இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி, பெரும் வரவேற்பு பெற்றநிலையில், நீண்ட நாளாகவே ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிடாமல் இருந்தது.

இந்நிலையில் இந்தப்படத்தின் டீசருடன் படத்தின் வெளியீட்டு தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது. டீசரில் “ஒருத்தன் கல்லால அடிச்சா நாமளும் கல்லால அடிக்கிறோம், ஒருத்தன் எச்சி துப்புனா பதிலுக்கு நாமளும் எச்சி துப்புறோம், ஆனால் ஒருத்தன் நம்ம வாழ்க்கைய அழிச்சிட்டா… நம்ம கனவு, உசிரு, ஆசை, உலகம் எல்லாமே, அவன தூக்கி ஜெயில்ல போட்ட… அதுக்கு பேரு பழி வாங்குறதா… பழிவாங்குறதுனா என்னன்னு தெரியுமா?” என்று கீர்த்தி சுரேஷ் கூறும் வசனம் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

image

துப்பாக்கியுடன் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் மிரட்டாலாக உள்ளனர். ரசிகர்களை ஈர்த்துள்ள இந்தப்படம் மே 6-ம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இந்தியா உள்பட 240 நாடுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வெளியாகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.