ஷில்பா ஷெட்டியின் இந்தியன் போலீஸ் ஃபோர்ஸ் வெப்சீரிஸ் பிரபல ஓடிடியில் வெளியிடு…!

ஆபாச படங்களை தயாரித்த விவாகரத்தில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர்
ராஜ் குந்த்ரா
கைது செய்யப்பட்டதை தொடர்ந்து நடிகை ஷில்பா ஷெட்டிக்கு சினிமாவில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

இந்நிலையில், முதன்முறையாக ஓடிடியில் அறிமுகமாக போகிறார்
ஷில்பா ஷெட்டி
என்கிற அறிவிப்பு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.ரோகித் ஷெட்டியின்
காப் யூனிவர்ஸின்
முதல் பெண் போலீஸ் இவர்தான் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

குஷி
படத்தில் மேக்கோரீனா பாடலுக்கு நடனமாடியதை போலவே இன்னமும் அதே அழகுடனும் இளமையுடனும் இருந்து வரும் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு 46 வயதாகிறது என்று சொன்னால், ரசிகர்கள் யாருமே நம்ப மாட்டார்கள். யோகா செய்வதில் வல்லவரான ஷில்பா ஷெட்டி தனது உடம்பை இரும்பு போல அப்படியே பாதுகாத்து வைத்துள்ளார்.

பீஸ்ட் படத்தின் விமர்சனங்களுக்கு நெல்சன் அளித்த பதில்..!

பாலிவுட்டில் நடிகையாகவும், ரியாலிட்டி ஷோக்களுக்கு நடுவராகவும் கலக்கி வந்த ஷில்பா ஷெட்டிக்கு பெரும் பின்னடைவாக அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்து விற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட நிகழ்வு ஏற்பட்டது. மேலும், ஷில்பா ஷெட்டியும் அவரது அம்மாவும் பண மோசடி வழக்கிலும் சிக்கி அவதிப்பட்டனர்.

இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்

தன்னையும் தனது கணவரையும் சுற்றி இருந்த பிரச்சனைகளை எல்லாம் ஒரு வழியாக சரிகட்டிய நடிகை ஷில்பா ஷெட்டி தற்போது முதன்முதலாக ஓடிடியில் அறிமுகமாக உள்ளார் என்கிற அறிவிப்பு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. அமேசான் பிரைமில் விரைவில் வெளியாக உள்ள
Indian Police Force
எனும் வெப்சீரிஸில் போலீஸ் அதிகாரியாக மிரட்ட உள்ளார்.

சித்தார்த் மல்கோத்ரா போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் இந்த வெப்சீரிஸில் பெண் போலீஸ் அதிகாரியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் ஷில்பா ஷெட்டி. பாலிவுட் பிரபலம் ரோகித் ஷெட்டியின் காப் யூனிவர்ஸில் முதல் பெண் போலீஸாக களமிறங்குகிறார் ஷில்பா ஷெட்டி. இது தொடர்பான அறிவிப்பை புதிய போஸ்டருடன் ஷில்பா ஷெட்டி மற்றும் ரோகித் ஷெட்டி ஷேர் செய்துள்ளனர்.

ஷில்பா ஷெட்டியை போலீஸ் உடையில் பார்த்த ரசிகர்கள் #ShilpaShetty ஹாஷ்டேக்கை ட்விட்டரில் தெறிக்கவிட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்தியன் போலீஸ் ஃபோர்ஸ் வெப்தொடரின் படப்பிடிப்பு பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் அந்த வெப்சீரிஸை உருவாக்கி வெளியிட படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.