பின்லாந்து மற்றும் ஸ்வீடனை தாக்கினால்…உதவிக்கரம் நீட்டிய நார்டிக் நாடுகள்: வீழும் ரஷ்யா!


பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் நோட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணையும் நடவடிக்கையின் போது தாக்கப்பட்டால் இருநாடுகளையும் பாதுகாக்க ராணுவ உதவியை தர நார்வே, டென்மார்க் மற்றும் ஐஸ்லாந்து நாடுகள் தயாராக இருப்பதாக கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை தொடர்ந்து, நார்டிக் நாடுகளாக பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் தங்களது பாதுகாப்பை அதிகப்படுத்தும் நோக்கில் மேற்கத்திய ராணுவ கூட்டமைப்பான நோட்டோவில் இணைய போவதாக தங்களது இறுதி முடிவை அறிவித்துள்ளனர்.

இதற்கு ரஷ்யா வலுவான எதிர்ப்பு தெரிவித்ததோடு, இது குறித்து பேசிய ரஷ்ய ஜனாதிபதி புடின், பின்லாந்து மற்றும் ஸ்வீடனின் இந்த முடிவு கடுமையான எதிர்வினையை தூண்டும் என எச்சரித்தார்.

இந்தநிலையில், பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் அதிகாரப்பூர்வ நோட்டோ கூட்டமைப்பு உறுப்பினராவதற்கு முன் தாக்கப்பட்டால், இருநாடுகளுக்கும் தேவையான அனைத்து விதமான ராணுவ பாதுகாப்பு உதவியையும் நார்டிக் நாடுகளான நார்வே, டென்மார்க் மற்றும் ஐஸ்லாந்து நாடுகள் வழங்க தயாராக இருப்பதாக நார்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நார்வே, டென்மார்க் மற்றும் ஐஸ்லாந்து நாடுகளை சேர்ந்த பிரதமர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில், நோட்டோ கூட்டமைப்பில் அதிகாரப்பூர்வ உறுப்பினராவதற்கு முன் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் ஏதேனும் தாக்கப்பட்டால் அதற்கு தேவையான அனைத்து ராணுவ உறுதுணையும் நாங்கள் வழங்க தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளனர்.

பின்லாந்து மற்றும் ஸ்வீடனை தாக்கினால்...உதவிக்கரம் நீட்டிய நார்டிக் நாடுகள்: வீழும் ரஷ்யா!

நோட்டோ அமைப்பை போன்று நார்டிக் நாடுகளின் கூட்டமைப்பும் பொதுவான மதிப்புகளையும், கொள்கைகளையும் பகிர்ந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

கூடுதல் செய்திகளுக்கு: புதிய தசாப்தம் தொடங்குகிறது…நோட்டோவில் இணைவதை உறுதிசெய்த ஸ்வீடன்: நெருக்கடியில் ரஷ்யா!

பின்லாந்து மற்றும் ஸ்வீடனை தாக்கினால்...உதவிக்கரம் நீட்டிய நார்டிக் நாடுகள்: வீழும் ரஷ்யா!

மேலும் நாங்கள் நார்டிக் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவோம், எங்கள் ராணுவம் பல ஆண்டுகளாக ஒன்றாக செயல்படுகின்றன எனவும், நார்டிக் நாடுகளான பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நோட்டோ ராணுவ கூட்டமைப்பிற்காக இதுவரை ஆற்றியுள்ள பங்களிப்பை பாராட்டுகி்றோம் எனவும் ஜோனாஸ் கர் ஸ்டோர் தெரிவித்துள்ளார்.   



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.