பிரிக்ஸ் வங்கி அலுவலகம்; குஜராத்தில் திறக்க முடிவு

பீஜிங் : பிரிக்ஸ்’ அமைப்பு நாடுகள் துவக்கியுள்ள, புதிய வளர்ச்சி வங்கியின் மண்டல அலுலகத்தை, குஜராத்தில் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதுபிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ள அமைப்பு பிரிக்ஸ். இந்த அமைப்பு சார்பில், புதிய வளர்ச்சி வங்கி ௨௦௧௫ல் துவக்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகம், சீனாவின் ஷாங்காய் நகரில் செயல்பட்டு வருகிறது.

இந்த வங்கி ஆண்டுக்கு ௨.௬ லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் வழங்கி, பிரிக்ஸ் நாடுகளில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதை முக்கியமான குறிக்கோளாக வைத்து செயல்படுகிறது. இந்நிலையில், இந்த வங்கியின் மண்டல அலுவலகத்தை, குஜராத் மாநிலத்தில் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குஜராத் தலைநகர் காந்திநகர் அருகே அமைக்கப்பட்டு வரும் ‘கிப்ட்’ நகரம் எனப்படும், குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரத்தில், இந்த அலுவலகம் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.