திருக்குளம் ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் போராட்டம்; பெண்ணாடத்தில் பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா அறிவிப்பு| Dinamalar

பெண்ணாடம் : பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலின் திருக்குள ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால், எனது தலைமையில் போராட்டம் அறிவியுங்கள் என, கட்சி நிர்வாகிகளிடம், பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்தார்.கடலுார் மாவட்டம் பெண்ணாடத்தில் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த, அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் அருகில் கோவிலுக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் 78 சென்ட் பரப்பிலான திருக்குளம் அமைந்துள்ளது.கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திருக்குளம் பராமரிப்பின்றி தனி நபர்கள் ஆக்கிரமித்து வீடு, கடைகளை கட்டி, கழிவு … Read more

தொடர் தோல்வியால் 'ரூட்' மாறும் நடிகர்கள்!

தமிழில் உச்ச நடிகர்களின் படங்கள் தொடர் தோல்வி அடைவதாலும், தயாரிப்பாளர்கள் பலத்த நஷ்டம் அடைவதாலும், நடிகர் – நடிகையர் தங்கள் 'ரூட்'டை அதிரடியாக மாற்றியுள்ளனர்.தென்னிந்திய திரையுலகில், சமீப காலமாக எவ்வளவு பெரிய பட்ஜெட் படமானாலும், கதைக்கு முக்கியத்துவம் இல்லையென்றால், அடுத்த நாளே தியேட்டர்கள் காலியாகி விடுகின்றன. ராதே ஷ்யாம் எனும் மிகப்பெரிய படத்தின் தோல்விக்கு பொறுப்பேற்று, தன் சம்பளத்தின் பெரும் தொகையை, நடிகர் பிரபாஸ் திருப்பி கொடுத்தார்.அஜித் நடித்த வலிமை வெற்றிப் படம் என்றாலும், அதன் வசூல் … Read more

மின் வாகன தீ விபத்து – தவிர்ப்பது எப்படி?

எதிர்கால போக்குவரத்தில் மின்வாகனங்கள் முக்கியப் பங்காற்றும் என கூறப்படும் சூழலில், அந்த வாகனங்களின் திடீர் தீவிபத்துகளால் அதன் பாதுகாப்பு தொடர்பாக மக்களுக்கு ஐயங்கள் எழுந்துள்ளன. மின் வாகனங்கள் தீ விபத்திற்குள்ளாவதை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு… ஆற்றலை சேமிக்கும் பேட்டரியில் மின்சார வாகனங்கள் இயங்கும் நிலையில், லித்தியம் அயன் பேட்டரிகளே தற்போது பயன்பாட்டில் உள்ளன. அண்மை காலமாக பேட்டரிகள் தீவிபத்திற்குள்ளாகும் சூழலில், தொழில்நுட்பத்தை சரியாகவும் கவனமாகவும் கையாள்வதன் மூலமாக இதுபோன்ற இடர்களை தவிர்க்கலாம் என்கிறார் … Read more

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை உயர வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயரவாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை, வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 82 டிகிரி முதல் 100 டிகிரிஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும். … Read more

பாகிஸ்தான், சீன எல்லையில் நிலைமை இயல்பாக உள்ளது: புதிய ராணுவ தலைமை தளபதி தகவல்

புதுடெல்லி: பாகிஸ்தான், சீன எல்லை பகுதிகளில் நிலைமை இயல்பாக உள்ளது என புதிய ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே கூறியுள்ளார். அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: “பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைப் பகுதிகளில் நிலைமை இயல்பாக உள்ளது. இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் ஏற்கெனவே உள்ள நிலைப்பாட்டில் எந்த மாற்றத்தையும் அனுமதிக்க மாட் டோம் என சீனாவிடம் இந்தியா தெளிவுபட கூறிவிட்டது. அதையும் மீறி எல்லையில் ஏற்கெனவே உள்ள நிலையை மாற்றும் நட வடிக்கையில் … Read more

லைவ் அப்டேட்ஸ்: ரஷிய ராணுவம் வெடிகுண்டு வீச்சு- 8 பேர் உயிரிப்பு, 11 பேர் காயம்

02.05.2022 04.50:  டொனெட்ஸ்க் மற்றும் கார்கிவ் பகுதிகளில் ரஷிய படையினர் நடத்திய குண்டு வீச்சு தாக்குதலில் பொதுமக்கள் 8 பேர் கொல்லப்பட்டனர். இதில் டொனெட்ஸ்கில் உள்ள லைமன் நகரில் மட்டும் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், 11 பேர் காயமடைந்தததாகவும், அந்த பிராந்திய ஆளுனர் பாவ்லோ கைரிலெங்கோ தெரிவித்துள்ளார்.  03.30:  உக்ரைன் நகரமான மரியுபோலில் உள்ள உருக்காலையில் இருந்து பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கை நடைபெற்றது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் உக்ரைன், ரஷிய அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் அசோவ்ஸ்டல்  உருக்காலையில் இருந்து … Read more

அ.தி.மு.க. சார்பில் மே தின கூட்டம்

புதுச்சேரி : புதுச்சேரி மேற்கு அ.தி.மு.க., சார்பில் மே தின கூட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்தது.அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் செல்வராஜி தலைமை தாங்கினார். எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளர் கார்த்திகேயன், கட்சி பேச்சாளர்கள் அமுதா, மூர்த்தி சிறப்புரை ஆற்றினர்.நலத்திட்ட உதவிகள் வழங்கி, மாநில செயலாளர் ஓம்சக்திசேகர் பேசியதாவது:புதுச்சேரி மாநிலத்தில் மக்களிடத்தில் அதிக ஆதரவு பெற்ற கட்சியாக அ.தி.மு.க., உள்ளது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வராதா என்று மக்கள் ஏங்கும் சூழல் உள்ளது. மீண்டும் புதுச்சேரி அ.தி.மு.க., எழுச்சி பெறும்.புதுச்சேரி … Read more

என் வாழ்க்கையை மாற்றியவர்: கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ் கதாநாயகனாக நடித்து வெளிவந்த 'கேஜிஎப் 2' படம் 1000 கோடி வசூலைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. 2016ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் திவா சுப்ராநேஷனல் அழகிப் பட்டத்தையும், அதன்பின் மிஸ் சுப்ராநேஷனல் 2016 அழகிப் பட்டத்தையும் வென்றவர். துளு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர் ஸ்ரீநிதி. பெங்களூருவில் எலக்ட்ரிகல் என்ஜினியரிங் படிப்பை முடித்தவர். அதற்குப் பிறகு 'கேஜிஎப்' முதல் பாகத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். … Read more

ஈரோட்டில் வீட்டின் வாசலில் உறங்கிக் கொண்டிருந்த விவசாயியை வெட்டிக் கொலை செய்து 25 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம கும்பல்.!

ஈரோட்டில், வீட்டின் வாசலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த விவசாயியை வெட்டிக் கொலை செய்த மர்ம கும்பல், 25 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னிமலை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் துரைசாமி- ஜெயமணி தம்பதி. நேற்றிரவு துரைசாமியும் ஜெயமணியும் வீட்டிற்குள் புழுக்கமாக இருந்ததால் வீட்டிற்கு வெளியே ஆளுக்கொரு கட்டிலில் படுத்து உறங்கியுள்ளனர். அதிகாலையில் பால்காரர் வந்து பார்த்த போது முகத்தில் வெட்டுக் காயங்களுடன் துரைசாமி சடலமாக கிடந்ததாகவும் கழுத்தில் வெட்டுக் … Read more

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.102 அதிகரிப்பு: ஓட்டலில் உணவுப் பொருள் விலை மேலும் உயரும் அபாயம்

சென்னை: சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.102.50 உயர்ந்து, ரூ.2,508.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், ஓட்டல்களில் உணவுப் பொருட்களின் விலைமேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்குநிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. இதில் பெட்ரோல், டீசல்விலை தினந்தோறும் என்ற அடிப்படையிலும், சமையல் எரிவாயு விலைமாதத்துக்கு 2 முறை என்ற அடிப்படையிலும் நிர்ணயிக்கப்படுகிறது. இதன்படி, கடந்த ஆண்டு … Read more