கவர்ச்சி, ஆக்ஷன் எதற்கும் ரெடி – சமந்தா அதிரடி

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. நடிகர் நாகசைதன்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டு சில வருடங்களிலேயே பிரிந்தார். பொதுவாக ஒரு நடிகைக்குத் திருமணம் ஆகிவிட்டால் அதையே காரணமாக வைத்து அவரை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய மாட்டார்கள். ஆனால், அந்தத் தடைகளை மீறி திருமணத்திற்குப் பின்னும் கதாநாயகியாக நடித்து வந்தார் சமந்தா. திருமணப் பிரிவுக்குப் பிறகும் அவரது இமேஜ் போய்விடும், வாய்ப்புகள் கிடைக்காது என்றார்கள். இருந்தாலும் இப்போதுதான் இன்னும் அதிகமான வாய்ப்புகளைப் பெற்று வருகிறார் … Read more

ஆடுமேய்க்கப் போன இடத்தில் ஆளாகி வந்தவள்.. வைரமுத்துவின் அன்னம்மா பெத்தவளே பாடல் ரிலீஸ்!

சென்னை: பாடலாசிரியர் வைரமுத்துவின் நாட்படு தேறல் பருவம் 2ன் 4வது பாடலான “அன்னம்மா பெத்தவளே” பாடல் வெளியாகி உள்ளது. “மூத்த குடியாள் மகள் ஆடுமேய்க்கப் போன இடத்தில் ஆளாகி வந்தது கண்டு அழுது பாடுகிறாள் இளைய குடியாள். ஒரு மகிழ்ச்சி இங்கே துக்கமாகிறது.” என இந்த பாடல் குறித்த விளக்கத்தை கூறியுள்ளார் வைரமுத்து. பாடலாசிரியர் வைரமுத்துவின் தயாரிப்பில் உருவாகி வரும் நாட்படு தேறல் 100 பாடல்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. 100 இசையமைப்பாளர்கள், 100 பாடகர்கள் மற்றும் 100 … Read more

பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்; மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவு

Dharumapuram Aadheenam says CM Stalin gives verbal permission to Pattina Pravesham: பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு முதல்வர் ஸ்டாலின் வாய்மொழி அனுமதி வழங்கியுள்ளதாக தருமபுரம் ஆதீனம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தருமபுரம் ஆதீனம் பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது என்று மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். தருமபுரம் ஆதீனத்தில் காலங்காலமாக, நடைபெற்று வரும் மனிதனை மனிதனே பல்லக்கில் தூக்கிச் செல்லும் பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனையடுத்து, மயிலாடுதுறை … Read more

குப்பையிலிருந்து மின்சாரம்! அமைச்சர் கே.என்.நேரு தகவல்.!

கோவை மக்களுக்கு சிறுவாணி குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சி வளாகத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடக்க விழாவில் கலந்து கொண்டனர். மேலும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு கோவை மாநகராட்சிக்கு 590 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை … Read more

கர்ப்பச் சர்க்கரையிலிருந்து தற்காத்துக் கொள்வது அவசியம்; கர்ப்பிணிகளின் கவனத்திற்கு! | Visual Story

கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் நீரிழிவை `கர்ப்பச் சர்க்கரை’ என்கிறோம். இப்பிரச்னை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. Diabetes இன்றைக்கு கர்ப்பம் தரிக்கிற பெண்களுக்கு அனைத்துப் பரிசோதனைகளோடும் ரத்த சர்க்கரை அளவு பரிசோதனையும் மேற்கொள்ளும் அளவுக்கு கர்ப்பச்சர்க்கரை பிரச்னை தீவிரமாக உள்ளது. கர்ப்பிணி (Representational Image) கர்ப்பச் சர்க்கரைக்கு ஆளாகும் பெண்களில் 50 சதவிகிதம் பேர் அடுத்த பத்தாண்டுகளில் நீரிழிவுக்கு ஆட்பட வாய்ப்பிருக்கிறது. எனவே அதனை ஓர் எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொண்டு செயலாற்ற வேண்டும். இன்றைக்கு உணவுப் … Read more

கேரளத்தில் தக்காளிக் காய்ச்சல்… தமிழகத்தில் அச்சம் வேண்டாம்

கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் தக்காளிக் காய்ச்சலால் 85 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இது குறித்து அச்சமடையத் தேவையில்லை எனத் தமிழக நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கேரளத்தில் குழந்தைகளுக்குப் புதிய வகைக் காய்ச்சல் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொல்லம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளைப் பரிசோதித்ததில், அவர்களுக்குத் தக்காளிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பாதிக்கப்படுவதால் பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி … Read more

இந்தித் திணிப்பைக் கண்டித்து ஜிப்மர் வாயிலில் மதிமுக ஆர்ப்பாட்டம்: வைகோ அறிவிப்பு

சென்னை: புதுச்சேரி ஜிப்மரில் இந்தித் திணிப்பைக் கண்டித்து அதன் நுழைவாயிலில் மதிமுக சார்பில் வரும் செவ்வாய்க்கிழமை (மே10ல்) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இதுகுறித்து வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “எப்பாடுபட்டேனும் தமிழர்கள் மீது இந்தியைத் திணித்துவிட வேண்டும் என்பதற்காக, நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அனைத்து வழிகளிலும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு கட்டமாக, புதுச்சேரியில் உள்ள ஜவஹர்லால் நேரு முதுகலை மருத்துவக் கல்வி … Read more

இந்தூர் சம்பவம் | காதலியைப் பழிவாங்க கட்டிடத்துக்கு தீ; 7 பேர் பலியான வழக்கில் இளைஞர் கைது

இந்தூர்: மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் தீ விபத்தில் 7 பேர் பலியான நிலையில், தனது காதலைப் புறக்கணித்தப் பெண்ணை பழிவாங்க இளைஞர் ஒருவர் அந்தக் கட்டிடத்துக்கு தீ வைத்தது அம்பலமாகியுள்ளது. சுபம் தீக்சசித் (சஞ்சய்) என்ற 28 வயதான இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் அவரது சொந்த ஊர் எனத் தெரியவந்துள்ளது. நடந்தது என்ன? மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று (மே 7) அதிகாலை அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ … Read more

மத்திய அமைச்சர் அதிரடி.. பாஜக அதிர்ச்சி; கோயில்களில் தலித்துக்கு அனுமதி இல்லை!

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக்குளத்தில் பாஜக நிர்வாகி இல்லம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். இதன் பின்னர் அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் 2014க்கு பிறகு மின்மிகை மாநிலங்களாக உள்ளன. தமிழகத்தில் சரியான பராமரிப்பு இல்லாமலும், நிர்வாக சீர்கேடு காரணமாகவும் மின் வெட்டு உள்ளது. தமிழக அரசு பொருளாதாரத்தில் கீழ்நிலையில் சென்றுள்ளது. அதனை மக்கள் தலையில் சுமத்திவிட்டு, மத்திய அரசு மீது பழி போடுவதை … Read more

முதன் முறையாக கையில் குழந்தையை ஏந்தியபடி காஜல் அகர்வால் வெளியிட்ட புகைப்படம் – இணையத்தில் வைரல்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகையான காஜல் அகர்வால் பிரபல தொழிலதிபர் கவுதம் கிச்சலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அண்மையில் கர்ப்பமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்பின்னர் நடிகை காஜலுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், இது தொடர்பான குழந்தையின் புகைப்படம் வெளியாகி வைரலாகி இருந்தது. தற்போது மார்டன் உடையில், புகைப்படம் ஒன்று வைரலாகி வரும் நிலையில், கையில் ஏந்தியப்படி குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. ஹேம்நாத்தால் கர்ப்பமான பெண்.. … Read more