அன்னியச் செலாவணி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, எரிபொருள் கட்டுப்பாடு, அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு, மின் வெட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை அந்நாடு சந்தித்து வருகிறது.
இந்நிலையில், இந்தியா இந்தாண்டு மட்டும், 26 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.இதன்படி, மார்ச், ஏப்ரல் மாதங்களில், 40 கோடி கிலோ பெட்ரோலிய பொருட்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டன. இதையடுத்து மே, 23ல், 4 கோடி கிலோ பெட்ரோல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம், மேலும் 4 கோடி கிலோ டீசல் உடன் ஒரு கப்பல் இலங்கைக்குச் சென்றுள்ளது. இது குறித்து இலங்கையில் உள்ள இந்திய துாதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இலங்கைக்கு வலு சேர்க்கும் வகையில் இந்தியா அனுப்பிய, 4 கோடி கிலோ டீசல் கொழும்பு வந்தடைந்துள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்டை நாட்டின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கைப்படி, வேறு எந்த நாட்டிற்கும் செய்யாத உதவிகளை இந்தியா இலங்கைக்கு செய்து வருகிறது.
அன்னியச் செலாவணி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, எரிபொருள் கட்டுப்பாடு, அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு, மின் வெட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை அந்நாடு சந்தித்து வருகிறது.
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.