TN Assembly Elections 2026: "யார் வந்தாலும் டாஸ்மாக்கை மூடணும்" – சிவகுமார் வேண்டுகோள்

தமிழக சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நேற்றிரவு முதல் வாக்களிக்க மக்கள் பலரும் சொந்த ஊருக்குக் கிளம்பியிருக்கிறார்கள்.

TN Assembly Elections 2026
TN Assembly Elections 2026

அப்படி நேற்று போதுமான பேருந்துகள் கிடைக்காததனால், சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். கூட்ட நெரிசலோடு கிடைக்கும் பேருந்துகளில் மக்கள், அவர்களின் சொந்த் ஊர்களுக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. காலை 11 மணி நிலவரப்படி, 36. 56 சதவிகித வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.

சென்னை தி நகரிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார் நடிகர் சிவகுமார்.

அவர், “நடிகர் சிவகுமார், “யார் ஆட்சிக்கு வந்தாலும் டாஸ்மாக் கடைகளை உடனே மூட வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்.

குடிமக்களைக் குடிகார மக்களாக்கியது போதும். கோடி கோடியா சொத்துக்களைக் குவிக்காமல், கடைக்கோடி மனுஷன் வாழ்க்கையில ஒளியேற்ற வேண்டும். இதுதான் என்னுடைய வேண்டுகோள்.

நடிகர் சிவக்குமார்
நடிகர் சிவக்குமார்

இதை இன்றைக்கு மட்டும் சொல்லவில்லை. கலைஞர் கருணாநிதியிடம் தொடக்கம் முதல் இதனை வலியுறுத்தி வருகிறேன். அப்போதிருந்துதான் நான் மதுவுக்கு எதிரானவன் தான்.

ஆனா, அதைச் செய்வார்களா எனத் தெரியவில்லை. ஆனால், அதை செய்தால் ரொம்பவே மகிழ்ச்சியடைவேன். கிட்டத்தட்ட 40 சதவிகித மக்கள் மதுவினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.” என்றார்,

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.