உலகிற்கு அச்சுறுத்தலாக மாறும் வடகொரியா; கிம் ஜாங் உன்னின் முக்கிய முடிவு

உலகம் முழுவதையும் அச்சுறுத்தும் முடிவை வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் எடுத்துள்ளார். மூன்று நாள் கூட்டம் நடந்த கூட்டம் தொடர்பாக,  சனிக்கிழமையன்று அரசின் அதிகாரப்பூர்வ கொரிய செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கிம் எடுத்துள்ள முடிவு உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் உள்ளது.   

வடகொரியா, மேலும் புதிய அணு ஆயுத சோதனைகளை நடத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக வெளியான தகவல்களை தொடர்ந்து, கிம் ஜாங் உன் தலைமையில் நடத்த கூட்டத்தில் ஆயுத உற்பத்தியை இரட்டிப்பாக்குவது குறித்து கிம் அறிவித்துள்ளார். கடுமையான பாதுகாப்புச் சூழலே இந்த முடிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், வடகொரியாவில் அணு ஆயுத உற்பத்தி அதிகரிப்பதற்கான அறிகுறிகளை பல்வேறு நாடுகள் கண்காணித்து வருகின்றன.

கிம் தனது ஆயுதங்களை பெருக்குவதை தற்காப்புக்கான இறையாண்மை உரிமை என்றும் கூறினார். மேலும் இது ஆயுதப்படைகள் மற்றும் இராணுவ விஞ்ஞானிகளால் முன்னெடுக்கப்படும் பணி என்று கூறினார். அணு வெடிப்புகள் உட்பட அணுசக்தி சோதனை நடவடிக்கை தொடர்பான எந்த குறிப்பிட்ட இலக்குகளையும் திட்டங்களையும் பற்றி செய்திக் குறிப்பில் எதுவும் குறிப்பிடவில்லை.

ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் நாட்டின் முக்கியப் பிரச்னைகளும் மதிப்பாய்வு செய்யப்பட்டன, கடந்த மாதம் நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று பரவியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

மேலும் படிக்க | USA vs North Korea: பேச்சுவார்த்தைக்கே வரமாட்டேன் என அடம்பிடிக்கிறது வடகொரியா: அமெரிக்கா

வெள்ளிக்கிழமை முடிவடைந்த மூன்று நாள் கூட்டத்தின் போது அணுசக்தி இராஜதந்திரத்தில் நீடிக்கும் முட்டுக்கட்டைக்கு மத்தியில் அமெரிக்கா அல்லது போட்டியாளரான தென் கொரியாவை வட கொரியா நேரடியாக விமர்சிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த வாரம், வடகொரியா, மேலும் புதிய அணு ஆயுத சோதனைகளை நடத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக வெளியான தகவல்களை தொடர்ந்து, வட கொரியாவுடன் உயர்நிலை பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா தொடர்ந்து முயற்சி செய்து வந்தது. ஆனால், அதை வடகொரியா புறக்கணிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.

அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் வட கொரியாவுடன் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை வாஷிங்டன் விரும்புவதாக பலமுறை பகிரங்கமாக கூறிய நிலையில், வட கொரியா பேச்சு வார்த்தை நடத்த தயாராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | தென்கொரியா மற்றும் அமெரிக்க அதிபர்களின் பேச்சுவார்த்தை: வடகொரியா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.