தனியார் கல்லூரி தலைவர் பாஜகவில் இருந்து நீக்கம்

விருதுநகர்:
னியார் கல்லூரி தலைவர் பாஜகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி தலைவர் தாஸ்வின் ஜான் கிரேஸ். இவர் பா.ஜ.க சிறுபான்மை பிரிவு கிழக்கு மாவட்ட தலைவராக இருந்து வந்துள்ளார்.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன் அதே கல்லூரியை சேர்ந்த ஒரு மாணவியிடம் வீடியோ காலில் நிர்வாணமாக ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனைக் கண்டித்து கல்லூரிக்கு வந்த மாணவிகள், கல்லூரி மூடி இருந்ததால் தர்ணாவில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து அங்கு போலிஸார் குவிக்கப்பட்டனர். மேலும் கல்லூரி சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸை நகர் காவல்நிலைய போலிஸார் கைது செய்தனர்.

இதையடுத்து, தாஸ்வின் ஜான் கிரேஸ் பாஜகவில் இருந்து நீக்கம் தாஸ்வின் ஜான் கிரேஸ் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.