ஜனநாயக ஆட்சியைப் பாதுகாக்க பொது நலவாய அமைப்பு அழைப்பு  

பொது நலவாய அமைப்பு சாசனத்தின் விழுமியங்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு இணங்க, ஜனநாயக முறையில் ஆட்சி செய்தல், சட்டத்துறையின் சட்ட திட்டங்கள் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றைப் பாதுகாக்குமாறு, இலங்கையின் அரசியல் தலைவர்களுக்கு பொதுநலவாய செயலாளர் நாயகம் Rt Hon Patricia Scotland QC ஆலோசனை வழங்கியுள்ளார்.

 அத்துடன் பொதுநலவாய அமைப்பில் உள்ள நிறுவனங்களையும் அவற்றின் அரசியலமைப்பு பற்றியும் நிர்வாகத்தை பாதுகாப்பதிலும் பலப்படுத்துவதிலும், பொருளாதார ஸ்திரத்தன்மையை எளிதாக்குவதிலும், இலங்கைக்கு தேவையான முழு ஆதரவினை வழங்குவதற்காக பொதுநலவாய செயலகம் அர்ப்பணிப்புடன் செயல்படும் என செயலாளர் நாயகம் வலியுறுத்தி கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து செயலாளர் நாயகம் தி ஆர்ட் ஹான் பாட்ரிசியா, இலங்கையிலுள்ள அனைவரையும் அமைதியுடனும் செயற்படுமாறு கேட்டு கொண்டுள்ளார்

” பொது நலவாய அமைப்பு (கொமன்வெல்த்) என்பது நமது பகிரப்பட்ட மதிப்புகளால் ஆதரிக்கப்படும் ஒரு சமூகமாகும். ஆசியாவின் பழமையான ஜனநாயக நாடுகளில் ஒன்றாகவும், நவீன பொதுநலவாய அமைப்பின் ஸ்தாபக உறுப்பினராகவும், இலங்கை எப்போதும் தனது மக்களால் போற்றப்படும் மற்றும் நம்பப்படும் இந்தக் கோட்பாடுகளுக்கு தனது வலுவான அர்ப்பணிப்பைக் காட்டியுள்ளது. ஜனநாயகக் கோட்பாடுகள், சட்டவாட்சி மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்க, தலைமைப் பதவியில் உள்ள அனைவருக்கும் நான் அழைப்பு விடுகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.