வாங்காத கடனுக்கு மார்பிங் செய்த படத்தை அனுப்பி மிரட்டும் கும்பல் – சைபர் கிரைம் போலீஸில் புகார்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கீரநல்லூர் கிராமத்தைச்  சேர்ந்தவர் முகமது ரியாசுதீன். இவர் பாஜக மாவட்ட சிறுபான்மை அணி பொதுச் செயலாளராகவும், சீர்காழி வர்த்தகர்கள் பாதுகாப்பு நல சங்கம் உறுப்பினராகவும் உள்ளார்.   இவர் கடன் செயலி (Loan app) மூலம் கடன் பெற தனது ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை  அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இவரின் ஆவணங்களை பெற்றுக்கொண்டு பணம் ஏதும் வழங்காத நிலையில், திடீரென அவரின் செல்போனுக்கு அந்த செயலி மூலம் ஒரு அழைப்பு வந்துள்ளது.

முகமது ரியாசுதீன்

அதில், `தாங்கள் வாங்கிய கடனுக்கு இம்மாத தவணை ரூ.3,000  செலுத்துமாறு’ கேட்டுள்ளனர். அதற்கு ரியாசுதீன், ” தங்களிடம் நான் பணம் வாங்கவில்லையே. விண்ணப்பம் மட்டும்தானே அனுப்பினேன். வாங்காத கடனை எவ்வாறு திரும்ப செலுத்துவது?” எனக்  கேட்டு பணம் செலுத்த முடியாது என கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவரின் படத்தை ‘மார்பிங்’ செய்து நிர்வாணமாக இருப்பதுபோல அவர் வாட்ஸ்அப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து அந்த நிறுவனத்தினர் முகமது ரியாசுதீனை தொடர்பு கொண்டு, “உடனடியாக பணத்தை செலுத்த வேண்டும். இல்லையென்றால் இந்தப்  படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவோம். மேலும் உங்கள் செல்போனில் கான்டாக்ட்  தொடர்பிலுள்ள அனைவருக்கும் அனுப்புவோம்” என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக ரியாசுதீனிடம்  பேசியபோது, “பணம் கொடுக்காததால் என் செல்போனில்  இருந்த நம்பர்கள் அனைத்திற்கும் என் படத்தை மாப்பிங் செய்து ஆபாசமான படங்களை  அனுப்பியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த நான் இதுகுறித்து சீர்காழி  காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளேன். மேலும்  மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுபோன்று நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு இதை கவனத்தில் கொண்டு தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான நபர்கள் இதுபோன்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதால், இதுபோன்ற மோசடியில் ஈடுபடும் நபர்களை விரைவாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்”  என்றார்.

Police station

காவல்துறை தரப்பில் விசாரித்தபோது, “பாதிக்கப்பட்டவரிடம் புகாரைப்  பெற்று சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, ஆன்லைன் லோன் மோசடி கும்பலை  தேடி வருகின்றனர்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.