ராம்ராஜ் காட்டன் நிறுவனம் சார்பில் செஸ் ஒலிம்பியாட் 'தம்பி வேட்டிகள்' அறிமுகம்

சென்னை: தென்னிந்தியாவின் கலாச்சார தலைமையகமான சென்னை, இந்திய செஸ் விளையாட்டின் புனிதத் தலமாகும். இது வரலாறுகள் படைக்கப்பட்ட இடம். சர்வதேச செஸ் விளையாட்டு போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகில் பூஞ்சேரி எனும் இடத்தில் நடைபெற உள்ளது.

இதற்கான தொடக்க விழா,சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறுகிறது. செஸ் ஒலிம்பியாட் அரங்கை பார்வையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வருகை புரிந்தபோது, செஸ் ஒலிம்பியாட் சின்னமான ‘தம்பி’ அணிந்துள்ள வேட்டியைப் போன்று பிரத்யேகமாகவும் தத்ரூபமாகவும் வடிவமைக்கப்பட்ட தம்பி வேட்டிகளை ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன், முதல்வரிடம் வழங்கினார்.

‘தம்பி’ என்ற பெருமிதம் மிக்க அடையாள சின்னமானது நெஞ்சு நிமிர்த்தி, கைகளை மடக்கிக் கட்டிக்கொண்டு, வெள்ளை வேட்டி சட்டையில் கம்பீரமாக உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சிறந்த தேர்வான ‘தம்பி’ ஏற்கெனவே பல வீடுகளில் பிரசித்தி பெற்ற பெயராகும்.

இந்த ‘தம்பி’ என்ற அடையாள உருவத்துக்கு ராம்ராஜ் செய்யும் கவுரவமாக பிரீமியம் தரத்தில் இப்புதிய வேட்டி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தோன்றிய செஸ் விளையாட்டின் பெருமையையும் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் விதமாக இது தயாரிக்கப்பட்டுள்ளது.

புத்தம் புதிய ‘தம்பி வேட்டிகள்’ வழக்கமான கலர் மற்றும் பாணியில் இல்லாமல் அற்புதமான கருப்பு வெள்ளை கட்டம் போட்ட பார்டரில் தயாரிக்கப்பட்டுள்ளது. குறைந்த காலமே விற்பனைக்குக் கிடைக்கும் அரிய வேட்டியாக ‘தம்பி வேட்டியை’ அறிமுகம் செய்வதில் ராம்ராஜ் பெருமை கொள்கிறது.

‘‘தம்பி வேட்டியைக் கட்டிக்கோ! செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஜெயிச்சுக்கோ!!’’

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.