கன்வெர்ஜென்ஸ் எனர்ஜி சர்வீசஸ் லிமிடெட் (CESL) நாடு முழுவதும் 10,275 கிலோமீட்டர் தொலைவில் 16 நெடுஞ்சாலைகள் மற்றும் எக்ஸ்பிரஸ்வேகளில் 810 எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையங்களை அமைக்க முடிவு.
எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள எனர்ஜி எபிஷியன்சி சர்வீசஸ் லிமிடெட் (EESL) இன் துணை நிறுவனமான CESL, 810 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை (EVCS) அமைப்பதற்கான செலவுகளைக் கணக்கிட்டு உள்ளது.
மீண்டும் 2013 சம்பவம் இந்தியாவில் நடக்குமா..??

முக்கிய நெடுஞ்சாலை
மும்பை-புனே நெடுஞ்சாலை, அகமதாபாத்-வதோதரா நெடுஞ்சாலை, டெல்லி-ஆக்ரா யமுனா எக்ஸ்பிரஸ்வே, கிழக்கு பெரிஃபெரல் எக்ஸ்பிரஸ்வே, ஹைதராபாத் ORR எக்ஸ்பிரஸ்வே மற்றும் ஆக்ரா-நாக்பூர் நெடுஞ்சாலை போன்ற பிசியான வழித்தடங்களில் இந்தச் சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்கு CESL சேவை கொள்முதல் மாதிரியைப் பயன்படுத்துகிறது.

கன்வெர்ஜென்ஸ் எனர்ஜி சர்வீசஸ்
இந்தக் கன்வெர்ஜென்ஸ் எனர்ஜி சர்வீசஸ் லிமிடெட் (CESL) இந்தச் சார்ஜிக் ஸ்டேஷனை பொது-தனியார்-கூட்டணி அதாவது PPP மாதிரியில் செயல்படுத்த உள்ளது. எக்ஸ்பிரஸ்வேக்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் முழுவதும் அமைக்கப்படும் இந்தச் சார்ஜிங் ஸ்டேஷன்களில் முதலீடு செய்து செயல்படும் நிறுவனங்களுடன் CESL கூட்டணி சேரும்.

6-8 மாதங்கள்
இந்தச் சார்ஜிங் நிலையங்கள் அடுத்த 6-8 மாதங்களில் நிறுவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெடுஞ்சாலைகளில் சார்ஜிங் உள்கட்டமைப்பை ஏற்படுத்துவது, கனரகத் தொழில்துறை அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் FAME-II திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

EV சார்ஜிங் நிலையங்கள்
ஹூண்டாய் கோனா, டாடா நெக்ஸான் இவி, எம்ஜி இசட்எஸ் இவி மற்றும் இதர எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் இ-பஸ்கள் போன்ற தனியார் மற்றும் பொதுத்துறை வாகனங்கள் உட்பட அனைத்து எலக்ட்ரிக் வாகனங்களும் பயன்படுத்தும் வகையில் இந்த EV சார்ஜிங் நிலையங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

DC சார்ஜிங் சேவை
வேகமான DC சார்ஜிங் சேவை வழங்க உள்ளது CESL, இந்நிறுவனம் 50kW திறன் கொண்ட 590 சார்ஜர்களையும், 100kW திறன் கொண்ட 220 சார்ஜர்களையும் நிறுவும். 50 கிலோவாட் திறன் கொண்ட சார்ஜர்கள் ஒவ்வொரு 25 கிலோமீட்டருக்கும், 100 கிலோவாட் சார்ஜர்கள் ஒவ்வொரு 100 கிலோமீட்டருக்கும் அமைக்கப்பட உள்ளது.
Convergence Energy Services set up 810 EV charging stations across 16 highways
Convergence Energy Services set up 810 EV charging stations across 16 highways 16 நெடுஞ்சாலை.. 810 EV சார்ஜிங் ஸ்டேஷன்.. அரசு நிறுவனத்தின் மாஸ் திட்டம்..!